Watch Video: முத்த மழையில் நனைந்த ஜோடி...உக்ரைனில் போருக்கு இடையே நடந்த திருமணம்..!
கீவ்வின் மேயரும் முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனுமான கிளிட்ச்கோ, அந்தப் பகுதிக்குச் சென்று இருவரையும் வாழ்த்தினார்.
ரஷ்யாவுடனான போருக்கு இடையே இரண்டு உக்ரைன் ராணுவ வீரர்கள் திருமணம் செய்து கொள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உக்ரைனில் போர் நடந்து வரும் சூழ்நிலையில், கீவ் அருகே ஒரு ஜோடி வீரர்கள் திருமணம் செய்து கொள்வதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. வீடியோவில் லெஸ்யாவும் வலேரியும் ராணுவ சீருடையில் இருந்ததையும், அவர்கள் உள்ளூர் பாடல்களைப் பாடியபடி மற்ற வீரர்கள் சூழ்ந்திருப்பதையும் காட்டுகிறது. இந்த ஜோடிகள் திருமணம் செய்து கொண்ட பிறகு ஒருவரை ஒருவர் முத்தமிட்டு கொண்டனர். கீவ்வின் மேயரும், முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனுமான விட்டலி கிளிட்ச்கோவும் தம்பதியரை வாழ்த்துவதற்காக அந்தப் பகுதிக்குச் சென்றார்.
உக்ரைன் தலைநகரில் நடந்த சண்டையின் 11ஆவது நாளில், பிராந்திய பாதுகாப்பு வீரர்கள் வலேரி மற்றும் லெஸ்யா, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஒன்றாக இருந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
கீவ்வின் மேயரும் முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனுமான கிளிட்ச்கோ, அந்தப் பகுதிக்குச் சென்று இருவரையும் வாழ்த்தினார்.
டுவிட்டரில் மனதைக் கவரும் தருணத்தின் வீடியோவைப் பகிர்ந்து கொண்ட கிளிட்ச்கோ, “ பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக பணிபுரிந்த லெஸ்யா மற்றும் வலேரியின் திருமணம் தலைநகரில் நடைபெற்றது. இந்த ஜோடியை வாழ்த்தினேன். ரொம்ப நாளா சிவில் மேரேஜ்ல வாழ்ந்துட்டு இருக்காங்க, இப்ப கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணியிருக்காங்க.. செக்போஸ்ட் ஒண்ணுக்கு பக்கத்துலதான் விழா நடந்தது” என்று பதிவிட்டுள்ளார்.
Сьогодні вітав бійців одного з батальйонів тероборони столиці Лесю та Валерія. Вони давно живуть в цивільному шлюбі, а тепер вирішили обвінчатися. Церемонія відбулася поруч з одним із блок-постів.
— Віталій Кличко (@Vitaliy_Klychko) March 6, 2022
Життя триває! І життя Києва, киян, нашої держави ми будемо захищати! pic.twitter.com/ys2kNN12Ws
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்