Rishi Sunak: காட்டு மிராண்டித்தனமான போர்: ஜி 20 மாநாட்டில் ரஷ்யாவை சாடிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!
உக்ரைனை விட்டு ரஷ்யா வெளியேற வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தினார்.
உக்ரைனை விட்டு ரஷ்யா வெளியேற வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தினார்.
ஜி20 என்பது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85%, உலகளாவிய வர்த்தகத்தில் 75% மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாகும்.
ஜி 20 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, கனடா, பிரேசில், பிரான்ஸ், சீனா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, கொரியா குடியரசு, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த மன்றத்தின் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகிறது. இந்த ஜி 20 மாநாட்டில் பங்கேற்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேசினார்.
அவர் பேசியதாவது:
“ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உலகத் தலைவர்களை சந்திப்பதற்காக ஜி20 மாநாட்டிற்கு வந்திருக்க வேண்டும். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் பல்வேறு நாடுகளிடையேயான உக்ரைன் உறவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் குடிமக்கள் மீதும் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த அனைத்து பிரச்சனைகளையும் மாற்றும் சக்தி ஒருவரிடம் உள்ளது. ரஷ்ய அதிபர் புதினுக்கு இங்கு வர வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஒருவேளை அவர் இங்கு வந்திருந்தால், உக்ரைன் விவகாரத்தில் ஏதாவது ஒரு முடிவை நம்மால் எடுத்திருக்க முடியும். ஏனென்றால் இந்த காட்டு மிராண்டித்தனமான போரை முடிவுக்குக் கொண்டு வர அவர் நினைத்தால் மட்டுமே முடியும்.
IPL 2023 Retention LIVE: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து அஷ்வின் விடுவிப்பு..?
உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு நம் அனைவருக்கும் பயங்கரமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் அடிப்படைக் கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. நாம் அனைவரும் இந்தக் கொள்களைச் சார்ந்து இருக்கிறோம்.
அவை சர்வதேச ஒழுங்கின் அடித்தளம். அவை நிலைநாட்டப்பட வேண்டும். இது ஒன்றும் கடினமானது அலல். எந்தவொரு நாடும் தங்கள் அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கக்கூடாது. அண்டை நாட்டு குடிமக்களின் உள்கட்டமைப்பு மற்றும் குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. நிச்சயமாக இவை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள்.
ஆற்றல் மற்றும் உணவை ஆயுதமாக்குவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. உக்ரைனில் விளையும் உணவு தானியங்கள் வளர்ந்த நாடுகளுக்கு செல்கிறது.
இது உலகெங்கிலும் உள்ள மக்களை பாதிக்கிறது. இதற்கும் தடைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார் ரிஷி சுனக்.
"தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்"
"உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இதன்மூலம், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும்" என்று வீடியோ வாயிலாக பேசும்போது மாநாட்டில் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், "ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய கதிரியக்க குண்டை வைக்க ரஷ்யா முயற்சிக்கிறது" என்றார்.