Watch Video: நம்பமுடியவில்லை.. இரண்டு தலையுடன் கில்லியாக வரும் பல்லி - வைரல் வீடியோ
கலிபோர்னியாவில் உள்ள ஊர்வன மிருகக்காட்சிசாலையின் நிறுவனர் ஜே ப்ரூவர், இதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இரண்டு தலைகள் கொண்ட பல்லியின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டில் கொலை, கொள்ளை, தற்கொலைகள், பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகள் தினமும் வருவது அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. டிவியை பார்த்தாலும், தினசரி பேப்பரை திறந்தாலும் இந்த செய்திகளே அதிகம் உள்ளன.
பொதுமக்களும், எதிர்மறையான செய்திகளை தினமும் படித்து வருவதால் அவர்களுக்குள்ளும் ஒருவித பயமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்த செய்திகளுக்கு இடையே, தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால், மூன்றாவது கண் என்று கூறப்படும் கேமராவால், பல்வேறு சுவாரஸ்யமான, அதிர்ச்சிகரமான சம்பவத்தின் காட்சிகளும் கிராம் முதல் நகரம் வரை உள்ள மக்களுக்கு உடனே தெரிந்து விடுகிறது. இதில், சுவாரஸ்யமான வீடியோக்கள் பல இணையத்தில் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகின்றன. இந்த வீடியோக்கள் உலகத்தின் எந்த மூலைகளில் இருக்கும் மனிதர்களுக்கும் சென்று சேர்ந்து விடுகிறது. தினசரி வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கும் சிலருக்கு சில நேரம் இந்த வீடியோக்கள் மகிழ்ச்சியை கொடுக்கிறது.
அந்த வகையில், இரண்டு தலைகள் கொண்ட பல்லியின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கலிபோர்னியாவில் உள்ள ஊர்வன மிருகக்காட்சிசாலையின் நிறுவனர் ஜே ப்ரூவர், இதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"நம்பமுடியவில்லை. இது ஒரு நம்பமுடியாத சிறிய நீல நாக்கு கொண்ட பல்லி. உங்கள் கண்களை நம்ப முடியுமா. இது நன்றாக வாழப்போகிறது என்று நான் நினைக்கிறேன்” என்று வீடியோவில் கூறுகிறார். இந்த வீடியோவை அதியசத்துடன் பார்த்து வருகின்றனர் பார்வையாளர்கள்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்