Donald Trump | ’யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க’ - சொந்தமாக செயலி உருவாக்கிய டொனால்ட் டிரம்ப்!
கிட்டத்தட்ட 9 மாதங்கள் சமூக வலைத்தளங்கள் பக்கம் தலைக்காட்டாத டிரம்ப் . தற்போது தனக்கு சொந்தமாக, செயலியுடன் கூடிய சமூக வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். “ட்ரூத் சோஷியல் “ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
முன்னணி சமூக வலைத்தளங்களுக்கு போட்டியாக , சொந்தமாக செயலி ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பல்வேறு வெறுப்புகளை சம்பாதித்தார். மேலும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் அவர் பதிவிடும் கருத்துகள் பல வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவும் , பொய்யுரைகளை ஆதரிக்கும் விதமாகவும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. நெட்டிசன்கள் உட்பட பல சமூக ஆர்வலர்கள் அவரின் சமூக வலைதள கணக்கை முடக்குமாறு அந்தந்த நிறுவனங்களுக்கு கோரிக்கைகளை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் டிரம்ப் பதிவிட்ட சில பதிவுகளை , ‘தவறான வழிநடத்தல்’ என்ற பிரிவின் கீழ் நீக்கியது. குறிப்பாக கொரோனா மற்றும் அதன் தடுப்பு மருந்துகள் குறித்தான தவறான வழிநடத்தை டிரம்ப் பதிவிட்டு வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் வெளியான அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் டிரம்பின் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதாகவே அமைந்தது. டிரம்பை எதிர்த்து நின்ற ஜோ பெய்டன் அபார வெற்றி பெற்றார். அப்போது டிரம்ப் , ஜோ பெய்டன் தேர்தல் முறைக்கேட்டில் ஈடுபட்டதாகவும் , அதன் அடிப்படையில்தான் அவர் வெற்றி பெற்றதாகவும் சர்ச்சைக்குறிய கருத்துகளை பதிவிட தொடங்கினார். இதனால் சமூக வலைத்தளங்கள் அவரின் கணக்குகளை தற்காலிகாமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடக்கலாம் என முடிவெடுத்தன. அமெரிக்க நாடாளுமன்ற செனட் கூட்டத்தின் பொழுது டிரம்பின் ஆதர்வாளர்கள் , அவையில் புகுந்து வன்முறையில் ஈடுபட சிலர் பரிதாபமாக உரிரிழந்தனர். இதனை தொடர்ந்து டிரம்ப்பின் சமூக வலைத்தள கணக்குகளை ஃபேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட வலைத்தளங்கள் நீக்கின.
இந்நிலையில் கிட்டத்தட்ட 9 மாதங்கள் சமூக வலைத்தளங்கள் பக்கம் தலைக்காட்டாத டிரம்ப் . தற்போது தனக்கு சொந்தமாக, செயலியுடன் கூடிய சமூக வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். “ட்ரூத் சோஷியல் “ என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த பக்கத்தில் மக்கள் இணைய டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் “ டிவிட்டர் பக்கத்தில் தாலிபான்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆனாலும் உங்களுக்கு பிடித்த அதிபரின் குரல் ஒடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார். மேலும் மிகப்பெரிய சமூக ஊடகங்களுக்கு எதிரான எனது வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என டிரம்ம் தெரிவித்துள்ளார். தற்போது சோதனை முயற்சியில் இருக்கும் ட்ரூத் சோஷியல் செயலியானது 2022 பாதியில் நடைமுறைக்கு வரும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் ஃபேஸ்புக் , ட்விட்டர் போன்று பொதுவான தளமாக ட்ரூத் சோஷியல் இருக்காது எனவும் , அரசியல் தலையீட்டுடன் கூடிய ஒரு தலைபட்சமான தளமாகத்தான் இருக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.