மேலும் அறிய

Syria Saydnaya Prison: மனித கசாப்புக் கடை - நிமிடங்களில் தூக்கு தண்டனை, குவியும் பிணங்கள் - பாலியல் சித்திரவதை..!

Syria Saydnaya Prison: மனிதர்களின் கசாப்புக் கடை என்று அழைக்கப்படும் சிரியாவின் சிறைச்சாலை குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Syria Saydnaya Prison: மனிதர்களின் கசாப்புக் கடை என்று அழைக்கப்படும் சிரியாவின் செட்னாயா சிறைச்சாலையில் இருந்த கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளனர். 

சிரியா சிறைச்சாலை:

சிரியாவில் 13 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அதிபர் பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி, தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் வெளிநாடு தப்பியோடிய நிலையில்,  கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸ், ஹமா மற்றும் அலெப்போ போன்ற நகரங்களை கைப்பற்றினர். அதனை தொடர்ந்து அங்கு உள்ள அரசு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த போர் கைதிகளை விடுவித்தனர். இந்த சிறைகளில் மிகவும் பிரபலமானது செட்னாயா, இது பெரும்பாலும் 'மனித படுகொலை' சிறைச்சாலை என்று அழைக்கப்படுகிறது.

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பின் 2021 அறிக்கையின்படி, செட்னாயா மட்டும் 30,000 க்கும் அதிகமானோர் உட்பட சிரிய ஆட்சி சிறைகளில் ஒரு 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். சர்வதேச மன்னிப்புச் சபையின் விசாரணையில், "செட்னாயாவில் கொலைகள், சித்திரவதைகள், வலுக்கட்டாயமாக காணாமல் போவது மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகள் 2011 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் அவை பொதுமக்கள் மீதான தாக்குதல்களைப் போலவே முறையாகவும் பரவலாகவும் உள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது. செட்னாயாவில் நடந்த இந்த சம்பவங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாக கருதப்படுவதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

செட்னாயா வெகுஜன தூக்கு தண்டனை:

மன்னிப்புச் சபையின் அறிக்கையின்படி,செட்னாயா ராணுவச் சிறைச்சாலையில் இரண்டு தடுப்பு மையங்கள் இருந்தன. அங்கு 2011 கிளர்ச்சிக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட பொதுமக்களும், போராட்டங்களில் ஈடுபட்ட ராணுவத்தினர் மற்றும் அதிகாரிகளும் அடைத்து வைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான கைதிகள் ரகசியமாக தூக்கிலிடப்பட்டனர் என்று அறிக்கை கூறுகிறது. "விசாரணைகளில்' பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படுகின்றனர். இந்த விசாரணைகள்வெறும் ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை மட்டுமேநீடிக்கும். மரண தண்டனை நிறைவேற்றப்படும்போது, ​​சிறை அதிகாரிகள் கொண்டாட்டங்களை பின்பற்றுகின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை உத்தரவு மற்றும் சித்திரவதை

செட்னாயாவில் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர உடல் மற்றும் மன சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக மன்னிப்பு சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, "சிறைவாசிகள் தொடர்ந்து கடுமையான தாக்குதல் மற்றும் பாலியல் வன்முறைகளை எதிர்கொண்டனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர், மருந்து, மருத்துவம் மற்றும் சுகாதாரம் ஆகியவை மறுக்கப்பட்டது, இது தொற்று மற்றும் நோய் பரவுவதற்கு வழிவகுத்தது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டபோது உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்த ஒரு கைதியை பற்றி அறிக்கை மேற்கோளிட்டுள்ளது. அதில், "முன்னாள் செட்னாயா கைதியிடம் இருந்து நீங்கள் உண்மையைக் கேட்பது அரிது. ஏனென்றால் அது மிகவும் அவமானமாக இருந்தது. காவலர்கள் எங்களுடைய ஆடைகளை களைந்து குளியலறைக்குச் செல்லச் சொல்வார்கள், பின்னர் இளைய அல்லது வயதான பையனைத் தேர்ந்தெடுப்பார்கள். மேலும் அவர் மீது மோசமான செயல்களை முன்னெடுப்பார்கள். யாரும் அதை வெளியே சொல்ல மாட்டார்கள், ஆனால் அது அடிக்கடி நடந்தது" என அந்த கைதி தெரிவித்துள்ளார்.

”கைதிகள் விடுதலையால் ஆபத்து அதிகம்”

இந்நிலையில் சிரியாவில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, கிளர்ச்சிப் படைகள் சிறைகளை கைப்பற்றி, செட்னாயா உள்ளிட்ட சிறைகளில் இருந்த கைதிகளை விடுவித்தனர். அரசியல் கைதிகளை விடுதலை செய்வது வரவேற்கத்தக்கது, ஆனால் சிறிதும் யோசிக்காமல் கைதிகளை விடுவிப்பது பெரும் ஆபத்தை தரக்கூடியது என மனித உரிமைகளுக்கான சிரிய நெட்வொர்க்கின் நிறுவனர் குர்தீன் அப்துல்கானி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
Embed widget