மேலும் அறிய
Advertisement
இந்தியாவுக்கான சரக்கு விமான சேவையை நிறுத்தியது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்..
விமானங்களுக்கு போதுமான எரிபொருள் இல்லாமையினால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது சரக்கு விமான சேவையை முற்றும் முழுதாக இடைநிறுத்தி இருக்கிறது.
இந்தியாவுக்கான சரக்கு விமான சேவையை நிறுத்தியது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து அங்கு எரிபொருள் தட்டப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில் விமானங்களுக்கான எரிபொருளுக்கு அங்கு பற்றாக்குறை நிலகுவதாக அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் அந்நாட்டிற்கு வரும் விமானங்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் தனது போக்குவரத்தினை ஆங்காங்கே குறைத்திருப்பதாகவே தகவல் வெளியாகியிருக்கிறது. அதிலும் முக்கியமாக இந்தியாவுக்கான சரக்கு போக்குவரத்தினை முற்றுமுழுதாக இடை நிறுத்தி இருப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்திருக்கிறது.இதனால் டன் கணக்கான சரக்கு பொருட்கள் தேங்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெயாகி இருக்கிறது.இலங்கையின் கொழும்பிலிருந்து சென்னை ,மதுரை ,திருச்சி ஆகிய விமான நிலையங்களுக்கு சரக்கு விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக நாளாந்த சேவைகளை குறைத்து வழங்கி வந்த நிலையில் ,தற்போது முழுவதுமாக சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது .
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ,சென்னைக்கு 3 சரக்கு விமான சேவைகளையும், திருச்சிக்கு மூன்று சேவைகளையும் ,மதுரைக்கு ஒரு சரக்கு விமான சேவையையும் வழங்கி வந்தது.
இன்னிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக சென்னை, மதுரை, திருச்சிகான சரக்கு விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் குறைத்து இருந்தது.தற்போது அங்கு விமானங்களுக்கு போதுமான எரிபொருள் இல்லாமையினால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது சரக்கு விமான சேவையை முற்றும் முழுதாக இடைநிறுத்தி இருக்கிறது.சரக்கு விமான சேவை நிறுத்தப்பட்டதால் சென்னை, திருச்சி, மதுரையில் இருந்து சராசரியாக நாளொன்றுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த 10 டன் பொருட்கள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பல நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் விமான சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இலங்கையில் எரிபொருள் கையிருப்பு குறைந்ததால் விமான சேவைகள் குறைக்கப்பட்டிருப்பதாக இலங்கை விமான துறை அமைச்சர் நிமல் சிரிப்பாலடி சில்வா தெரிவித்திருக்கிறார்.எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கைக்கு வரும் சில விமான சேவைகள் இந்தியா உள்ளிட்ட அயல்நாடுகளிடமிருந்து எரிபொருட்களை கொள்வனவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கான விமானங்களின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும் பட்சத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் சர்வதேச நாடுகளில் இருந்து வரும் விமான சேவைகள் குறைக்கப்படும் பட்சத்தில் இலங்கைக்கான வருமானம் என்பது மேலும் மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது.சர்வதேச நாடுகளில் இருந்து வரும் விமான சேவைகளில் முக்கியமாக சுற்றுலாத்துறை என்பது இலங்கையில் ஓரளவு வருமானம் ஈட்டக்கூடிய துறையாக இருந்து வந்தது.
தற்பொழுது விமான சேவைகள் அங்கு குறைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா துறையும் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.ஏற்றுமதி ,இறக்குமதி , சுற்றுலாத்துறை ,வெளிநாட்டு முதலீடுகள் போன்றன முழுவதுமாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.அத்துடன் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு பணியாளர்களாக வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் குறையும் என கூறப்படுகிறது.இதனை அடுத்து விமான சேவைகளில் திருத்தங்களை செய்து, இலங்கையின் அந்நிய செலாவணிக்கு பாதிப்பு இல்லாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அமைச்சர்கள் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகை என்பது பாதிக்குப் பாதி குறைவடைந்துள்ளதாகவே சொல்லப்படுகிறது.இதனால் விமான சேவைகளை ஓரளவாவது சரி செய்யும் பொருட்டு, எரிபொருள் இறக்குமதியை சில தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவை இலங்கை அரசு எடுத்திருக்கிறது.இலங்கைக்கு நாள்தோறும் மேற்கொள்ளும் விமான போக்குவரத்து சேவையால் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ஓரளவு வருமானம் ஈட்டக் கூடிய வகையில் இருந்தது .
இந்நிலையில் விமான சேவைகள் பாதிக்கு பாதி குறைக்கப்பட்டால் இலங்கையின் பொருளாதாரத்தில் அது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். உலக நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான சேவை, சரக்கு போக்குவரத்து போன்றன இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு ஓரளவு உதவியாக இருந்து வந்தது .இருந்த போதும் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சனையால் சரக்கு போக்குவரத்தை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நிறுத்தி இருப்பது இலங்கைக்கான வருமானத்தை மேலும் பாதிப்படைய செய்வதாகவே அமைந்திருக்கிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion