Ranil Wickremesinghe: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, சீனா செல்ல உள்ளதாக தகவல்.. எதற்காக?
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தான் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக சீனா விற்கு பயணம் மேற்கொள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கு சென்று அங்கு கலந்துரையாடலில் ஈடுபட இருப்பதாக சீனாவுக்கான இலங்கை தூதர் பாலித்த கொஹன தெரிவித்திருக்கிறார்.
சீனாவிடம் இருந்து இலங்கை அரசு நான்கு பில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியாக கேட்டிருப்பதாகவும் ,அது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகவும் மேலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பேச இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.அதேபோல் இலங்கையில் சீனாவின் வர்த்தக முதலீடு மற்றும் சுற்றுலாத் துறையில் அந்நாட்டின் ஒத்துழைப்பு போன்றவை குறித்து பேசுவதற்காக ரணில் விக்ரமசிங்க சீனா செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு திடீரென சீனாவின் பக்கம் தனது கரிசனையை செலுத்தி இருப்பது என்ன காரணத்துக்காக என இதுவரை தெரியவில்லை.இலங்கையின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் ஏற்கனவே சீனா முதலீடு செய்து இருக்கிறது.
துறைமுக திட்டங்கள், சுற்றுலாத்துறை அபிவிருத்தியென பழைய அரசான ராஜபக்சவினர் இருக்கும்போதே சீனா பல்வேறு திட்டங்களை முன்னெடுத்திருந்தது. இந்நிலையில் அதில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடரும் என சீனாவிற்கான இலங்கை தூதர் தெரிவித்திருக்கிறார்.
கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் சீனாவின் பங்களிப்புடன், மேற்கொள்ளப்பட்ட துறைமுகத் திட்டங்களுக்கு மேலதிக முதலீட்டை பெற்றுக்கொள்ள இலங்கை எதிர்பார்த்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் நிதி உதவி மட்டுமல்லாமல் உரம் ,எரிபொருள் உள்ளிட்ட மேலும் தேவையான பொருள் உதவிகளைப் பெற இலங்கை அரசு சீனாவை நாடி இருக்கிறது
இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சீனாவின் உதவி மிக முக்கியம் என தெரிவித்துள்ள அந்நாட்டுக்கான தூதர் பாலித்த கொஹனவின் கருத்தானது, இலங்கைக்கு அதிக அளவில் கடன் வழங்கிய நாடு என்ற வரிசையில் சீனாவும் நிற்பதை காட்டுகிறது.
இந்தியா ,சீனா ,ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கைக்கு அதிகளவில் கடனுதவிகளை வழங்கிய நாடுகள் வரிசையில் முன் நிற்கின்றன.தற்போது இலங்கை தனது கடன் தொகையில் 10 சதவீதத்தை சீனாவிற்கே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை, ஆடைகள், மற்றும் மாணிக்ககற்கள் போன்றவற்றை சீன நிறுவனங்கள் அதிக அளவில் கொள்வனவு செய்து உதவ வேண்டுமென சீனாவுக்கான இலங்கை தூதர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கூறியிருக்கிறார்.கொரோனா தொற்றுக்குப் பிறகு இலங்கையில் பெரிய அளவிலான சீன முதலீடுகள் எதுவும் சாத்தியமாகவில்லை என பாலித்த கொஹன தெரிவித்திருக்கிறார். இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து தற்போது பூஜ்ஜியமாக இருப்பதாகவே சீனாவுக்கான இலங்கை தூதர் தெரிவித்திருக்கிறார் .
2018 ஆம் ஆண்டு 2 லட்சத்து 65 ஆயிரம் ஆக இருந்த சுற்றுலா பயணிகளின் வருகையானது,
இலங்கையில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல் மற்றும் கொரோனா பரவலால் பெருமளவு வீழ்ச்சி அடைந்திருப்பதால் இலங்கைக்கு அதிகளவு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
மேலும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கு புதியவர் அல்ல என கூறியுள்ள பாலித்த கொஹன 2016 ஆம் ஆண்டு ரணில் பிரதமராக இருந்தபோது சீனாவிற்கு சென்று கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். தற்போதைய இலங்கையின் புதிய அரசில் ,சீனா தொடர்பான அடிப்படைக் கொள்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் சீனாவுக்கான இலங்கை தூதர் தெரிவித்திருக்கிறார்.
உலகின் பல்வேறு நாடுகளுக்கு சீனா உதவ வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாலேயே, உடனடியாக இலங்கைக்கு உதவ முடியாத நிலையில் சீனா தற்போது இருப்பதாகவும் அவர் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு கூறியிருக்கிறார். ஆக இந்த பொருளாதார நெருக்கடியான காலகட்டங்களில் இலங்கை எதிர்பார்த்த உதவி சீனாவிடமிருந்து கிடைக்கவில்லை என்ற ஒரு கூற்று சீனாவுக்கான இலங்கை தூதர் வழியாக தெரிய வந்திருக்கிறது. ஆகவே இதனை அடுத்து இலங்கையின் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க சீனா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.முன்னதாக ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமராக பதவியேற்ற காலகட்டங்களில் தனது முதல் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.