80 பெண்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ... இணையத்தில் வெளியிட்டது தவறில்லை என்று தள்ளுபடி!
பொது இடத்தில் சிறுநீர் கழித்த 80 பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணைய தளத்தில் வெளியானதை அடுத்து அவர்கள் தொடுத்த வழக்கு நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.
சமீபத்தில் ஸ்பெயினில் பல பெண்கள் பொதுவில் சிறுநீர் கழிப்பதை படம்பிடித்து, அந்த வீடியோக்களை ஆபாச இணையதளங்களில் பதிவேற்றிய வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். விவீரோ நகரில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தின் நீதிபதி பப்லோ முனோஸ் வாஸ்குவேஸின் தீர்ப்பு ஸ்பெயினில் பெண்களின் உரிமைகள் குறித்து தீவிர விவாதத்திற்கு வழிவகுத்தது. 2019 ஆம் ஆண்டில் வடமேற்கு நகரமான செர்வோவில் மருக்ஸைனா திருவிழாவில் சில பெண்கள் பொதுவில் சிறுநீர் கழித்ததாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. கழிப்பறை வசதிகள் இல்லாததால் பக்கத்து தெருவில் சிறுநீர் கழிக்கும் போது சுமார் 80 பெண்கள் ஹிட்டன் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டனர். பிபிசியின் அறிக்கையின்படி, தெரியாத குற்றவாளிகள், பெண்களின் பிறப்புறுப்புகள் மற்றும் முகங்களின் க்ளோஸ்அப் காட்சிகளை ஆபாச தளங்களில் பதிவேற்றியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் வீடியோக்களைப் பற்றி அறிந்ததும், அவர்களில் பலர் கடந்த ஆண்டு சட்ட நடவடிக்கை மூலம் வழக்கு தொடுத்தனர்.
தனியுரிமைக்கான உரிமை மீறப்பட்டதன் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரினர். இருப்பினும், நீதிபதி பப்லோ முனோஸ் வாஸ்குவேஸ், வீடியோக்கள் பொது இடத்தில் பதிவு செய்யப்பட்டதால், அவை குற்றமாக கருதப்பட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். பாதிக்கப்பட்ட பெண்களின் "உடல்ரீதியான அல்லது தார்மீகரீதியான தாக்குதல்கள் செய்யும் எண்ணம் உள்ளதாக வீடியோவில் தெரியவில்லை" என்றும் நீதிபதி முடிவு செய்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கிறது.
பெண்கள் பொதுவில் சிறுநீர் கழிக்கிறார்கள் என்ற அடிப்படையில் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு ஸ்பெயினின் சமத்துவ அமைச்சர் ஐரீன் மான்டெரோ உட்பட பலரை முரண்பட செய்தது, "ஒரு பெண்ணின் அனுமதியின்றி புகைப்படம் எடுத்து அவற்றை பரப்புவது பாலியல் வன்முறை. தெருவில் அல்லது பொது இடத்தில் ஒரு பெண்ணுக்கு தனியுரிமைகள் உண்டு. பெண்களின் உரிமைகள் முன்னேற்றங்கள் மாநிலத்தின் அனைத்து கிளைகளிலிருந்தும் பயன்படுத்தப்பட வேண்டும்" என்று அவர் கூறினார். ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக அணிவகுத்துச் சென்று லுகோ நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஒரு மாபெரும் பேரணி நடத்தினர். இதற்கிடையில், உயிர்பிழைத்தவர்கள் மற்றும் உரிமைகள் குழுவான "வுமன் ஃபார் ஈக்வலிட்டி புரேலா" (புமேய்) இந்த வழக்கை தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது.
இன்றைய முக்கிய சிறப்புச் செய்திகள் இதோ...
Survivor Tamil: வனமே வனத்திற்கு வந்தது போல்... சர்வைவரில் வந்திறங்கிய வனேசா குரூஸ் யார்?
‛காபி குடித்தால் கொரோனா வராது’ காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் பேச்சு!
அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு எதிர்ப்பு... போராட்டத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள்!