‛காபி குடித்தால் கொரோனா வராது’ காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் பேச்சு!
அதிகம் காபி குடிக்கும் மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் தெரிவித்தார்.
காபி அல்லது குளம்பி என்பது பலரும் விரும்பி அருந்தும் நீர்ம உணவு அதாவது பானம் என்றும் அழைப்பார்கள். காபி என்னும் செடியில் விளையும் சிவப்புநிற காபி பழத்தின் கொட்டையை பக்குவமாய் வறுத்து பிறகு அரைத்து பொடி செய்து அதன்பின் நீருடன் சேர்த்து அல்லது சேர்க்காமலும் பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காபி ஆகும். உலகிலேயே அதிகமாக விற்று,வாங்கக்கூடிய நிலத்தின் விலை பொருளாக உள்ள பெட்ரோலியத்திற்கு அடுத்ததாக உள்ள இரண்டாவது பொருள் காபிதான். உலகில் 50க்கும் அதிகமான நாடுகளில் ஏறக்குறைய 10 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்படுகின்றது, இன்று ஏறத்தாழ 100 மில்லியன் மக்களின் வாழ்வாதரம் காபி பயிரை விவசாயம் செய்வது.
காபிச் செடியில் 100 க்கும் அதிகமான இன வகைகள் உள்ளன. ஆனால் அவற்றுள் இரண்டே இரண்டு வகை செடிகள் மட்டுமே பயிரிடப்பட்டு, நீர்ம உணவுக்குப் பயன்படும் காபியாக உள்ளன. இவ்விரு இனங்களின் அறிவியல் வகைப்பாட்டுப் பெயர்கள் காபியா அராபிக்கா, காபியா கன்னெஃவோரா என்றும் அழக்கப்படுவர். காபி செடியில் 600 பேரினங்களும் 13, 500 இனச்செடிவகைகளும் உள்ளன.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி கிராமத்தில் முக்கிய தொழிலாக இருப்பது விவசாயம். குறிப்பாக இந்த கிராமத்தில் காபி வாரிய ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டுவருகிறது, இந்த ஆராய்ச்சி நிலையத்தில் 7வது சர்வதேச காபி தினம் கொண்டப்பட்டது, இந்நிகழ்ச்சியில் காபியின் பயன்பாடுகள் குறித்த அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும், காபி விவசாயம் பற்றி மலை கிராம விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் காபி விவசாயத்தில் அரசுகள் வழங்க கூடிய சிறப்பு சலுகைகள் மற்றும் காப்பி விவசாயத்தில் அதிக வருமானம் கிடைப்பதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டும் ,காபி செடிகள் பராமரிப்பு பற்றி விவசாயிகளுக்கு முழுமையாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் புது வகையை சேர்ந்த 5355 என்ற ரக காபி நாற்றுகளை அறிமுகம் செய்து 150 விவசாயிகளுக்கு இலவசமாக காபி நாற்றுகள் வழங்கப்பட்டது . இந்த புதிய ரக காபி செடி நோய் தாக்கத்திற்கு எதிராக இருப்பதாகவும் மற்றும் அதிக லாபம் தர கூடிய வகையில் இந்த காபி நாற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் கருத்தமணி கூறியதில், ‛‛ தினந்தோறும் காபி அருந்துவதனால் உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி ஏற்படுகிறது என்றும் ,ஆண்களுக்கு ஏற்படக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோய் காபி அருந்துவதனால் 20 சதவிகிதம் கட்டுப்படுத்துவதாகவும் காபி தினந்தோறும் அருந்துவதனால் உடல் எடை குறைப்பதற்கு முக்கிய பங்கு வகிப்பதாகவும், மருத்துவத்துறையிலும் காபி முக்கிய பங்கு வகிப்பதாகவும், தினந்தோறும் காபி அருந்தும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று அதிகமாக ஏற்படவில்லை என்றும், காபி அருந்தாத மக்களுக்கு கொரோனா தொற்று அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்வில் கீழ்மலை சுற்றுவட்டார கிராம விவசாயிகள் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.