Shinzo Abe killer: சின்சோ அபே கொலை; வீட்டில் தயாரித்த துப்பாக்கி: வெளியான திடுக்கிடும் தகவல்!
ஜப்பானின் முன்னாள் அதிபர் சின்சோ அபேவை கொலை செய்தவர் தன் வீட்டிலேயே துப்பாக்கி ஒன்றை தயாரித்திருப்பதாக அந்நாடின் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, அந்நாட்டின் நாரா நகரில் தேர்தல் பிராச்சார நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்திருந்த போது, அவரை பின்புறமாக ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அங்கிருந்தவர்கள் இரண்டு முறை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதன் ஒலியைக் கேட்டதாகவும், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர். அன்று மாலையே சின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நெஞ்சில் குண்டு பாய்ந்ததால் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின்போது ஷின்சோ அபே-வை சுட்டுக் கொன்றவரை போலீசார் துரத்திப் பிடித்தனர். ஷின்சோவைக் கொன்றவர் டெட்சுயா யமகாமி (Tetsuya Yamagami) என்பவர் என காவல்துறையின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. யமகாமியை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Shinzo Abe's killer wielded homemade gun, grudge over mother's bankruptcy https://t.co/L9B1FRQDBo pic.twitter.com/lP8IAKSwxF
— Reuters (@Reuters) July 9, 2022
இந்த விசாரணையின் போது கிடைக்கும் தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டு வருகின்றனர். அதில் இவர் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையில் (Maritime Self-Defence Force ) 2002 முதல் 2005 ஆம் ஆண்டுவரை பணியாற்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
The guy who apprehended Shinzo Abe’s killer displayed a quick wit.
— Gbénró Adégbolá ن (@GbenroAdegbola) July 9, 2022
I’m no security expert, but in a country where violence is extremely rare, I think he did well.
In a few secs he determined the shooter had a homemade gun & having released 2 shots would have to reload. pic.twitter.com/A0yakYPofG
இந்நிலையில் டெட்சுயா யமகாமி ஷின்சோ அபே-வை கொலை செய்வதற்காக அவர் பயன்படுத்தியது, வீட்டிலேயே கையால் தயாரித்த துப்பாக்கியாக இருக்கலாம் என போலீசாரின் தகவல் தெரிவித்தது பற்றி ஜப்பானிய செய்திகள் தெரிவிக்கின்ற்ன. அதன்படி, குற்றாவாளியை போலீசார் கைது செய்யும் புகைப்படத்துடன், ஒரு ஜோடி குழாய் துப்பாக்கிகள், மரத்தடுப்பு மற்றும் டக்ட் டேப் ஆகியவற்றுடன்கூடிய துப்பாக்கியை எடுத்துச் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கி செய்ய தேவையான சில பொருட்களை டெட்சுயா ஆன்லைனில் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜப்பான் நாட்டில் துப்பாக்கி பயன்பாட்டிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில், முன்னாள் பிரதமரை கொலை செய்ய இப்படி பொதுவெளியில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி மிகவும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்