மேலும் அறிய
Advertisement
விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் ரஷ்யா
நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளைக் காட்டிலும் இந்த வைரஸ் பண்ணை விலங்குகளை அதிகம் பாதிக்க வாய்ப்பிருப்பதாலேயே ரஷ்யா கார்னிவேக்-கோவ் (Carnivac-Cov) தடுப்பூசியை கடந்த அக்டோபரில் இருந்து சோதித்துக் கொண்டிருந்தது. இப்போது அதைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது.
விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியை ரஷ்யா தொடங்கியுள்ளது. இதனை அந்நாட்டு செய்தி நிறுவனம் ஆர்ஐஏ RIA உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்த ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தப் பெருந்தொற்றுக்கு எக்கச்சக்க உயிரிழப்புகளை உலகம் சந்தித்துவிட்டது.
இனியும் உயிரிழப்புகள் தொடரக்கூடாது என்பதாலேயே உலக நாடுகள் பலவும் தடுப்பூசி கண்டறியும் பணியை முடுக்கிவிட்டன. இந்தியாவின் கோவேக்சின், கோவிஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5, அமெரிக்காவின் மாடர்னா, ஃபைசர் என நிறைய தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன. இந்நிலையில், ரஷ்யா கடந்த மார்ச் மாததில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து பதிவு செய்தது. இந்த ஊசி செலுத்தப்பட்ட நாய்கள், பூனைகள், நரிகள் மற்றும் கீரிகளில் கொரோனா நோய் எதிர்ப்பு ஆன்ட்டிபாடிக்கள் உருவாகிவிட்டதாக ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், தற்போது ரஷ்யாவில் உள்ள விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. கார்னிவேக்-கோவ் (Carnivac-Cov) என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்குக் கொரோனா பரவலை கண்காணிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்திருந்தது. ஒருவேளை அப்படிப்பரவினால் அதனால் கொரோனா வைரஸ் உருமாறி மீண்டும் மனிதகுலத்திற்கு அச்சுறுத்தல் ஆகிவிடக்கூடாது என்பதால் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியையும் உலக நாடுகள் கண்டுபிடிக்க உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
டென்மார்க் நாட்டில் பண்ணைகளில் வளர்க்கப்பட்ட கீரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அங்கு மிங்க் வகை கீரிப்பிள்ளைகள் கொத்துகொத்தாக கொன்று குவிக்கப்பட்டன. அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள், மனிதர்களின் கொரோனா மிங்க் உயிரினங்களுக்குப் பரவி அவற்றிடமிருந்து உருமாறி மனிதர்களுக்குப் பரவத் தொடங்கியது. அதனாலேயே அவற்றைக் கொன்றோம் என விளக்கமளித்தனர்.
இப்போதும் கூட, கொரோனா அடுத்த அலை ஏற்பட்டால் அதில் பண்ணை விலங்குகள் பாதிக்கப்படும் அபாய சூழல் இருப்பதாகவும் ரஷ்ய விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளைக் காட்டிலும் இந்த வைரஸ் பண்ணை விலங்குகளை அதிகம் பாதிக்க வாய்ப்பிருப்பதாலேயே ரஷ்யா கார்னிவேக்-கோவ் (Carnivac-Cov) தடுப்பூசியை கடந்த அக்டோபரில் இருந்து சோதித்துக் கொண்டிருந்தது. இப்போது அதைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது.
விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கு இவ்வளவு கவனம் செலுத்தி கண்டுபிடிக்காவிட்டால், விலங்குகளிடமிருந்து உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டு பூதாகரமான சவாலாக நம் முன் நிற்கலாம். அதனாலேயே இப்போது விலங்குகளுக்கு தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதே போல் இந்தியாவில் ஏற்கனவே பூங்காக்களில் வசிக்கும் சிங்கங்கள் மற்றும் குரங்குகளுக்கு கொரோன தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவை தனிமைப்படுத்தப்பட்டன . ரஷ்யா தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கையை வைத்து, கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion