சப்போர்ட்டுக்கு நாங்க வர்ரோம்..பிரதமர் மோடிக்கு போன் போட்ட ரஷ்ய அதிபர் புதின்!.ஷாக்கில் பாகிஸ்தான்!
Russia Supports India: பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியாவுக்கு ஆதரவளித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியை தொழிபேசி வாயிலாக அழைத்து, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல்:
ஜம்மு-காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான பஹல்காமில், கடந்த மாதம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவமானது, அனைவரையும் மிகவும் கவலை அடையச் செய்தது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படுவதாக கூறப்படும் லக்சர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான டி.ஆர். எஃப் பொறுப்பேற்றுக் கொண்டது. மேலும், பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் அரசாங்கம் ஊக்குவிப்பதாக இந்தியா கண்டனம் தெரிவித்து, குற்றம் சாட்டி வருகிறது.
Also Read: பாகிஸ்தான் பிரதமர் யூடீயூப்பை பிளாக் செய்த இந்தியா..கிரிக்கெட் வீரர்களில் யார்...எதற்கு இது?
பாகிஸ்தானுக்கு நெருக்கடி:
இந்த தருணத்தில், பாகிஸ்தானிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்தது. மேலும் பாகிஸ்தான் குடிமக்கள் மற்றும் பெரும்பாலான அதிகாரிகளை இந்தியாவை விட்டு வெளியே செல்லுமாறு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு, ரஷ்ய அதிபர் புதின் தனது ஆதரவை வழங்கியதாகவும், கொடூரமான தாக்குதலுக்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார் என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
Also Read: பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல் பேச்சு..எங்கள் அணு ஆயுதம், ஷோவுக்காக இல்லை, இந்தியாவுக்காக!
இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் ஆதரவு:
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, இன்று அழைத்து இந்தியாவின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடுமையாக கண்டித்தார். பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி உயிர்கள் இழப்புக்கு அவர், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவையும் வழங்குவதாகவும், கொடூரமான தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் வலியுறுத்தினார், என்று ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.
மேலும், ரஷ்யாவின் வெற்றி தினத்தின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு , இந்தியாவுக்கு வருமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
Also Read: தடுமாறும் பாகிஸ்தான் அரசு...சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமரிடம் உதவி கேட்ட தற்போதைய பிரதமர்!
பாகிஸ்தானிற்கு பின்னடைவு
கடந்த வாரம், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செகி லாவ்ரோவ், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அழைத்து, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்து விவாதித்தார்.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்திய-பாகிஸ்தான் உறவுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளது, பாகிஸ்தானுக்கு எதிரான போக்காக பார்க்கப்படுகிறது. இந்த தருணத்தில், உலக அளவில் ராணுவ வலிமை கொண்ட நாடு, இந்தியாவுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்திருப்பது பாகிஸ்தானுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவே பார்க்கப்படுவதாக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Also Read: சிந்து நதி நீரில் கட்டுமானம் கட்டினால்...அதை...2வது முறை மிரட்டல் விடுத்த பாகிஸ்தான அமைச்சர்






















