தடுமாறும் பாகிஸ்தான் அரசு...சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமரிடம் உதவி கேட்ட தற்போதைய பிரதமர்!
Pakistan PM Shehbaz Sharif- Imran Khan: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரிடம், பிரதமர் செபாஸ் செரீஃப் உதவி கேட்டுள்ளார்.

இந்தியாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் மற்றும் பிரதமர் செபாஸ் ஷெரீப் ஆகியோர் தற்போது சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் உதவி கேட்டுள்ளனர்.
இம்ரான் கானிடம் உதவி கேட்கும் செபாஸ் செரீஃப்:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் மற்றும் பிரதமர் செபாஸ் ஷெரீஃப் ஆகியோர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உதவியை நாடியுள்ளனர். சிறையில் உள்ள இம்ரான் கானுடன் பேச்சுவார்த்தை நடத்த நான்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறையில் இருக்கும் இம்ரான் கான்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அல்-காதிர் அறக்கட்டளை தொடர்பான நில ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இம்ரான் கான் கடந்த 2023 ஆகஸ்ட் முதல் முதல் சிறை தண்டனை அனுபவத்து வருகிறார். ஆனால் இவர் மீது, பொய் குற்றச்சாட்டுகளை கூறி சிறையில் அடைக்கப்பட்டதாக, இம்ரான் கான் கட்சியினர் ( தெஹ்ரீக்-இ-இன்சாஃப் ), தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தியாவுடனான உறவு குறித்தும் கோசங்களை எழுப்பி வருகின்றனர்.
வெடிக்கும் போராட்டம்:
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் எதிர்க்கட்சியினர் போராட்டமும் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சிந்து மாகாணத்தில் போராட்டங்களை , நாட்டின் ராணுவத் தலைவர் அசிம் முனீருக்கு ஆதரவளிக்கவும் இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இம்ரான் கானை சமாதனபடுத்தும் செபாஸ் செரீஃப்:
இதற்கு முன்பு, புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, அப்போது பிரதமராக இருந்த இம்ரான் கான், பாகிஸ்தான் உளவு பிரிவு ( ஐஎஸ்ஐ ) தலைவர் பதவியில் இருந்த அசிம் முனீரை நீக்கினார்.
ஐஎஸ்ஐ வரலாற்றில் முதல்முறையாக, பதவியில் இருந்த ஒரு தலைவர் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே நீக்கப்பட்டது இதாக பார்க்கப்பட்டது. இது முனீர் மற்றும் கானுக்கு இடையிலான உறவை மோசமாக்கியது. உண்மையில், இம்ரான் கானின் சிறையில் இருப்பதற்கு அசிம் முனீர் ஒரு பெரிய பங்கைக் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்கள் ஷெரீப் மற்றும் முனீர் இருவரையும் இம்ரான் கான் முன் நிறுத்தியுள்ளன. கானின் பிடிஐ கட்சி நாட்டில் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக மாறி வருகிறது, மேலும் அதன் தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் பொதுமக்களின் கருத்தை ஆதரவையும் பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், பெரும் போராட்டங்கள் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருவதால், ஷெரீப்பும் முனீரும், இம்ரானை கானை சமாதானப்படுத்த அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





















