E-cigratte: புகைப்பிடிக்கும் கர்ப்பிணிகளுக்கு இலவச கவுசிலிங்...லண்டனில் தொடங்கிய திட்டம்...
E-cigratte: அமெரிக்காவில் புகைப்பிடிக்கும் கர்ப்பிணிகளுக்கு இலவர கவுசிலிங் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
E-cigratte: அமெரிக்காவில் புகைப்பிடிக்கும் கர்ப்பிணிகளுக்கு இலவச கவுசிலிங் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள கர்ப்பிணிகளில் சராசரியாக 13% பேர் புகைபிடிப்பவர்களாக உள்ளனர். இது லண்டனின் சராசரியை விட அதிக அளவில் இருப்பதாகவும் சுகாதாரக் குழுவுக்கு மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது என கூறப்படுகிறது. புள்ளி விவரங்களின் அடிப்படையில், 2020-22ம் ஆண்டில், பிரசவத்தின் போது, 9.1% கர்ப்பிணிகள் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாகத் தங்களைத் தெரிவித்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
புகையிலை வாங்காமல் இருப்பதன் மூலம் வருடத்திற்கு 2,000 பவுண்டுகள் (தோராயமாக ரூபாய் 1,86,617) மிச்சப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. புகையிலை பழக்கத்தை நிறுத்துவதன் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாதிப்பு நிலைமை குறையும் என கூறப்படுகிறது. மேலும், கவுன்சிலின் தரவுகளின்படி, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அதிகமாக புகைபிடிப்பதாகவும், இந்த பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் வறுமையில் வாடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்ப்பிணிகள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடும் பட்சத்தில் அவர்களுக்கு இலவச கவுன்சிலங் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புகைப்பிடிப்பதற்கு பணம் செலவழிப்பதை நிறுத்தவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளவர்கள் மீண்டும் வர இயலாத நிலையில், இ-சிகரெட்டை பயன்படுத்தவும் உதவும்.
புகைபிடிப்பதை விட குறைவான தீங்கு விளைவிப்பதால், புகையிலையை நிறுத்துவதற்கு மின்-சிகரெட்டைப் பயன்படுத்துவதை ஆதரிக்கத் திட்டமிட்டுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-சிகரெட் என்பது Electronic nicotin sysytem என்பதாகும். இந்தத் சிகரெட் புகையிலைக்கு மாற்றானது. ஒரு ஆவியாகும் தன்மை கொண்ட கரைசல் வேதிப் பொருளை பயன்படுத்துகிறது. இதில் நிக்கோட்டின், புரோப்லீன் கிளைகால் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இருக்கும். இந்த இ-சிகரெட் பல வடிவங்களில் இருக்கும். பேனாக்கல் போன்ற வடிவத்தில் சந்தைகளில் கிடைக்கின்றன. இந்த இ-சிகரெட்டை அமெரிக்காவின் மிசிசன் மற்றும் நியூயார்க் நகரங்கள் தடை செய்துள்ளன. மேலும் இந்தியாவில் இதனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்தது குறிப்பிடத்தக்கது.