இயந்திரத்தில் தலைமுடி சிக்கி கர்ப்பிணி பெண் மரணம்.. ஐரோப்பியாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!
கர்ப்பிணி பெண் ஒருவர் நேர்காணலின்போது இயந்திரத்தில் தலைமுடி சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பியாவில் உள்ள பெலாரஸில் கர்ப்பிணிப் பெண் வேலைக்காக நேர்காணலுக்கு சென்றிந்தபோது அவரது தலைமுடி இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வெல்டிங் கம்பி மற்றும் மின்முனைகள் தயாரிக்கும் பெலாரஸின் போரிசோவில் உள்ள ஸ்வர்மெட் தொழிற்சாலைக்கு மூத்த பணியாளர்கள் உமிடா நசரோவா என்ற 21 வயது கர்ப்பிணி பெண் தொழிற்சாலை ஒன்றில் வேலை நேர்காணலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது, எதிர்பாராத விதமாக அவரது முடி தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி உச்சந்தலையில் கிழிந்துள்ளது.
தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்திற்குப் பிறகு, அந்தப் பெண்ணுக்கு நீண்ட முடி இருந்ததைக் கண்டதும், அதை மறைக்க ஏன் தொப்பியோ அல்லது வேறு எதையோ கொடுக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து பெலாரஸ் புலனாய்வுக் குழு கூறியதாவது : ஊழியர்கள் ஒரு பதிவேட்டில் சில பதிவுகளை செய்ய சில நிமிடங்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். அப்பொழுது தீடிரென ஒரு பெண் அலறல் சத்தம் கேட்டபோது ஊழியர்கள் அனைவரும் திரும்பி பார்த்துள்ளனர். எல்லாரும் அந்த பெண்ணுக்கு என்ன நடந்ததோ என்று ஓடிசென்று பார்த்தபோது அப்பெண் ஏற்கனவே மயக்கமடைந்து தரையில் கிடந்துள்ளார். அவளுடைய தலைமுடியையும் இயந்திரத்தில் சிக்கி இருந்தது. இது சில நிமிடங்களில் நடந்தது என்றும், அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்கு ஆலையின் மூலம் நிதியளிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.
Crime | ”வயசுதான் காரணம்” பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்த மனைவி! வழக்கில் புது திருப்பம்..
உமிடாவின் தந்தை டிமிட்ரி கூறுகையில், தொழிற்சாலையில் பாதுகாப்பு தேவைகள் அனைத்தும் இங்கு பொய்கள் ஆனது. ஏழு வார கர்ப்பமாக இருந்த என் பெண்ணுடன் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளது. ஒரு நபரின் மரணத்திற்கு காரணமான நேர்மையற்ற மற்றும் பொறுப்பற்ற அணுகுமுறையே காரணம். இதற்கு கடமைகளை நிறைவேற்றத் தவறிய ஆலை உற்பத்தித் தலைவரே குற்றவாளி எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்