மேலும் அறிய

Urban Local Body Election: விஜய் கெட்டப்பில் சைக்கிளில் ஊர்வலமாக சென்று மனுத்தாக்கல்...மதுரையை கலக்கிய விஜய் மக்கள் மன்றத்தினர்!

Madurai Urban Local Body Election 2022: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது, வாக்குப் பதிவு அன்று தன்வீட்டிலிருந்து விஜய் சைக்கிளில் புறப்பட்டது ட்ரெண்ட் ஆனது.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அரசியலுக்கு உதயமான விஜய் மக்கள் இயக்கம், ஊராட்சியில் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றது. இது விஜய் தரப்பில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தனது இயக்கத்தின் பெயரை, கொடியை, தனது பெயரை கூட பயன்படுத்திக் கொள்ளுங்கள் என விஜய் கொடுத்த அனுமதி, விஜய் மக்கள் இயக்கத்தினரை மும்முரமாக களமிறங்க வைத்தது.

இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் தொடங்கிய நிலையில், இறுதிநாளான இன்று, பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மனுத்தாக்கல் செய்தனர். வழக்கம் போல வித்தியாசத்திற்கு பெயர் போன மதுரையில், மதுரை 88 வது வார்டு அனுப்பானடி(தனி) வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாகேஸ்வரி என்பவர் போட்டியிட முடிவு செய்தார். அதன் படி இன்று அனுப்பானடியில் இருந்து மண்டலம் 3 ன் அலுவலகத்திற்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய புறப்பட்டார்.

அவருடன் விஜய் மன்றத்தினர் பலரும் உடன் வந்ததோடு இருந்திருந்தால் பிரச்சனை இல்லை. விஜய்யே வந்தால்? மன்னிக்கவும், விஜய் மாதிரி ஒருவர் வந்தார்... முதலில் ஸ்கூட்டர் ஒன்றில் தொண்டர் ஒருவர் ஓட்டி வர, பின்னால் விஜய் வேடமணிந்த ஒருவர் அமர்ந்து, கைகளை அசைத்தவாறு நாகேஸ்வரிக்கு ஆதரவு திரட்டினார் விஜய் வேடம் அணிந்திருந்த அந்த நபர். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொண்டு, அவர் ஓட்டிக் கொண்டு வர, வேட்பாளரை காணவில்லை. விஜய் வேடம் அணிந்தவர் பின்னால், ரசிகர்கள் பின்னாலேயே ஓடி வந்தனர். 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது, வாக்குப் பதிவு அன்று தன்வீட்டிலிருந்து விஜய் சைக்கிளில் புறப்பட்டது ட்ரெண்ட் ஆனது. அதே போல, விஜய் பாணியில் அவர் வேடம் அணிந்தவரும் சைக்கிளில் சென்று, அனுப்பானடி தேர்தல் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர். 

இதோ விஜய் கெட்டப்பில் வலம் வந்த ரசிகர்களின் அலப்பறை வீடியோக்கள் இதோ...

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Embed widget