அட! அது நான் இல்லப்பா!! பெயரால் வந்த குழப்பம்! வழிமாறிப்போன பிரதமருக்கான வாழ்த்து!
விரைவில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் லிஸ் ட்ரஸ் என எண்ணி, பலர் தவறான நபருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
![அட! அது நான் இல்லப்பா!! பெயரால் வந்த குழப்பம்! வழிமாறிப்போன பிரதமருக்கான வாழ்த்து! People Tweeting To Wrong Liz Truss While Congratulating Incoming UK PM அட! அது நான் இல்லப்பா!! பெயரால் வந்த குழப்பம்! வழிமாறிப்போன பிரதமருக்கான வாழ்த்து!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/06/8f3d9db337e77dbd48688332962104621662465328937224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரபலமான பெயர்களை கொண்டிருப்பதால் சில சமயங்களில் குழப்பங்கள் ஏற்படலாம். ட்விட்டர் பயனர் ஒருவருக்கு இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. விரைவில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் லிஸ் ட்ரஸ் என எண்ணி, பலர் தவறான நபருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால், பின்னர்தான், தெரிய வந்தது லிஸ் டிரஸ் என்ற பெயர் கொண்ட வேறு நபருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறோம் என்பது.
திங்களன்று ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் 47 வயதான டிரஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கை தோற்கடித்து வெற்றி பெற்றார். மார்கரெட் தாட்சர் மற்றும் தெரசா மே ஆகியோருக்குப் பிறகு இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் லிஸ் டிரஸ்.
ஆனால், லிஸ் ட்ரஸ்ஸலுக்கு, இது நிறைய சிக்கலைக் கொண்டு வந்துள்ளது. அவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளத்தில் சேர்ந்துள்ளார். '@liztruss' என்ற பெயரில் கணக்கை கொண்டுள்ள லிஸ் ட்ரஸ்ஸல், ட்விட்டரில் அரிதாகவே பதிவிட்டுள்ளார். பிரபலங்கள் கூட, அவர் கணக்கை டேக் செய்து வாழ்த்து தெரிவித்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அவர்களில், ஸ்வீடன் பிரதமர் தவறான கணக்கை டேக் செய்து பதிவு வெளிட்டுள்ளார். பின்னர், தவறை உணர்ந்த மாக்டலினா ஆண்டர்சன் தனது பதிவை நீக்கினார். ஆனால், டிரஸ்ஸல், ஸ்வீடன் பிரதமரை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.
Looking forward to a visit soon! Get the Meatballs ready
— Liz Trussell (@Liztruss) September 5, 2022
ஸ்வீடன் பிரதமர் டேக் செய்த பதிவுக்கு பதில் அளித்த டிரஸ்ஸல், "விரைவில் வருகைக்காக காத்திருக்கிறேன்! மீட்பால்ஸை தயார் செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். ரைட் ஆஃப் சென்டர் யுகே செய்திகள் மற்றும் கரண்ட் அப்பைர்ஸ் பத்திரிகையும் லிஸ் ட்ரஸ்ஸலை ட்வீட் செய்து வாழ்த்து தெரிவித்தது. "புதிய இங்கிலாந்து பிரதமரானதற்கு @LizTruss! வாழ்த்துகள். வேலைக்கான சிறந்த நபர்!" என வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கு டிரஸ்ஸலும், ஒப்புகொள்கிறேன் கிண்டலாக பதில் அளித்துள்ளார். கன்சர்வேடிவ் கட்சிக்கான தலைவர் போட்டியில் வெற்றி பெற்ற லிஸ் ட்ரஸ், போரிஸ் ஜான்சனுக்குப் பிறகு பிரதமராக பதவியேற் உள்ளார். அவர் 1975 இல், ஆக்ஸ்போர்டில் பிறந்தார். அவரது தந்தை லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும், தாயார் செவிலியராகவும் இருந்துள்ளனர்.
ட்ரஸ் 1996இல் பட்ட படிப்பை முடித்தார். ஷெல்லில் வணிக மேலாளர் பதவியில் இருந்துள்ளார். கேபிள் & வயர்லெஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பொருளாதார இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)