மேலும் அறிய

NASA Prediction | 2030-ஆம் ஆண்டில் பெரிய பெரிய அலைகள்.. மாதக்கணக்கில் வெள்ளம் - நாசாவின் அதிர்ச்சி ஆய்வு!

2030-ஆம் ஆண்டில் கடலில் மிகப்பெரிய அலைகள் உண்டாகி வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கடலோர பகுதிகளை எச்சரித்துள்ளது நாசா.

வெயில், மழை, பனி என பருவக்காலங்களுக்கு ஏற்ப வானிலை மாறுவது வழக்கம். இந்த மாதமெல்லாம் கோடைக்காலம், இவையெல்லாம் மழைக்காலம் என நாம் மாதங்களை கணக்கிட்டு வைத்துள்ளோம். ஆனால் இப்போதெல்லாம் எப்போது மழை வருகிறது, எப்போது புயல் வருகிறது என்ற கணக்கெல்லாம் இல்லை. கோடை காலத்தில் புயல் உருவாகிறது. மழைக்காலத்தில் கடுமையான பனி பெய்கிறது. இந்த வானிலை மாற்றங்களுக்கு காரணமாக சொல்லப்படுவது புவியின் வெப்பம். வெப்பமயமாதலால் வானிலையில் இந்த மாற்றங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. புவியின் வெப்பமயமாதலால் வானிலை மாற்றம் ஏற்படுவது மட்டுமின்றி, பனிப்பாறை உருகுவது, கடல் மட்டம் உயருவது போன்ற பேரிடர்களும் உண்டாகத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் நாசா சமீபத்தில் ஆய்வின் முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2030ம் ஆண்டில் கடலில் மிகப்பெரிய அலைகள் உண்டாகி வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கடலோர பகுதிகளை எச்சரித்துள்ளது. இதற்கு காரணம் நிலவின் தள்ளாட்டம் எனக் கூறுகிறது நாசா.

NASA Prediction | 2030-ஆம் ஆண்டில் பெரிய பெரிய அலைகள்.. மாதக்கணக்கில் வெள்ளம் -  நாசாவின் அதிர்ச்சி ஆய்வு!

காலநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்கிறது. இதனால் ஏற்படும் புவியின் சுழற்சி, நிலவின் சுழற்சியில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றத்தாலே பெரிய அலைகள் உண்டாகி வெள்ளம் ஏற்படலாம் என நாசா கூறுகிறது. இந்த ஆராய்ச்சியை நாசாவின் காலநிலை நெருக்கடியால் ஏற்படும் கடல் மட்டங்களை அதிகரிக்கும் சந்திர சுழற்சியின் பின்னர் வெள்ளத்தின் அதிகரிப்பு தொடங்கும் என்று ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வுக்கு ஹவாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நாசா கடல் மட்ட மாற்றம் அறிவியல் குழு உறுப்பினர்கள் தலைமை தாங்கியுள்ளனர்.

சமீப  காலங்களில் ஏற்பட்ட கடல் அலை உயர்வு தொடர்பான காரணங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டும் இந்த ஆய்வு எடுக்கப்பட்டதாக கடல் மட்டம் குறித்து எழுதப்பட்ட ‘Nature Climate Change’ என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு பெருங்கடல்களில் சுமார் 600க்கும் மேற்பட்ட பெரிய அலைகள் பதிவாகியுள்ளது. இந்த ஆய்வின்படி, 2030ம் ஆண்டுகளில் மாதக்கணக்கில் இந்த பெரும் அலைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இது நிலா, பூமி, சூரியனின் நிலையை பொருத்து மாறுபடும் எனக் கூறப்பட்டுள்ளது. சில நகரங்களில் தினமும் வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

NASA Prediction | 2030-ஆம் ஆண்டில் பெரிய பெரிய அலைகள்.. மாதக்கணக்கில் வெள்ளம் -  நாசாவின் அதிர்ச்சி ஆய்வு!

சமீபத்தில் ஒரே நாளில் மின்னல் தாக்கி இந்தியாவில் 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மின்னலுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்று வானிலை விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மின்னல் தாக்கம் அதிகரிப்பதற்கு புவி வெப்பமயமாதல் முக்கிய காரணி என்கின்றனர் நிபுணர்கள். புனேவில் உள்ள ஐஐடிஎம் ( Indian Institute of Tropical Meteorology) மையத்தில் கடந்த மாதம் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பேசிய விஞ்ஞானி எஸ்.டி.பவார், "1960-ஆம் ஆண்டில் இருந்து 2019 காலக்கட்டத்தில் மின்னல் தாக்கி ஏற்பட்ட உயிரிழப்புகளைக் காட்டிலும் தற்போது மின்னல் உயிரிழப்புகள் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது. இது நேரடியாக காலநிலை மாற்றத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. புவி வெப்பமயமாதல் அதிகரிப்பதால் நிலப்பரப்பின் மீதான ஈரத்தன்மை அதிகரிக்கிறது. இது மின்னல் அபாயத்தை ஏற்படுகிறது" என்று கூறியுள்ளார்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
நட்பில் அடிப்படையில் தான் பாஜகவுக்கு ஆதரவளித்தோம், அரசியல் நோக்கத்தில் அல்ல - செல்லூர் ராஜூ பேட்டி !
நட்பில் அடிப்படையில் தான் பாஜகவுக்கு ஆதரவளித்தோம், அரசியல் நோக்கத்தில் அல்ல - செல்லூர் ராஜூ பேட்டி !
Kuldeep Yadav Record: அனில் கும்ப்ளேவின் சாதனையை போட்டு நொறுக்கிய குல்தீப் யாதவ்; 3-வது ஒருநாள் போட்டியில் அசத்தல்
அனில் கும்ப்ளேவின் சாதனையை போட்டு நொறுக்கிய குல்தீப் யாதவ்; 3-வது ஒருநாள் போட்டியில் அசத்தல்
Embed widget