Mayor Married To Crocodile :முதலையை திருமணம் செய்த மெக்சிகன் மேயர்.. என்ன காரணம் தெரியுமா ?
மெக்சிகன் மேயர் முதலையை திருமணம் செய்து கொண்டது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மெக்சிகோ நகரில் பழங்கால நம்பிக்கைப்படி இயற்கையின் அருளைப் பெற வேண்டி மேயர் ஒருவர் முதலைக் குட்டி ஒன்றை இளவரசியாக பாவித்து திருமணம் செய்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மெக்சிகோவின் டெஹுவான்டெபெக் இஸ்த்மஸில் (Tehuantepec isthmus )உள்ள பழங்குடி மக்களின் நகரமான சான் பெட்ரோ ஹுவாமெலுலாவின் (San Pedro Huamelula )மேயரான விக்டர் ஹ்யூகோ சோசா, முதலையை திருமணம் செய்தார். முதலையை இயற்கையின் பிரதிநிதியாக அவர்கள் கருதுகின்றனர். முதலையுடன் மனிதனுக்கு திருமணம் செய்து வைத்தால், இயற்கை வளங்கள் பெருகும் என பல நூறு ஆண்டுகளாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்த நம்பிக்கையின் பேரில் இந்த திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ஏற்படும் அசம்பாவிதத்தை தவிர்க்க முதலையின் வாய் கட்டப்பட்டு இருந்தது. முதலைக்கு வெள்ளை நிற ஆடை உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டிருந்தது. திருமணம் முடிந்த பின் மேயர் பாரம்பரிய இசைக்கு நடனமாடினார். 7 வயது முதலையை, இளவரசியாகப் பாவித்து திருமணம் செய்து கொண்ட மேயர், இந்த நிகழ்வில் மணப்பெண் போல் வேடமிட்ட முதலைக்கு முத்தமிட்டு தனது அன்பைப் பரிமாறிக்கொண்டார்.