(Source: ECI/ABP News/ABP Majha)
Mahinda Rajapaksa Net Worth: யார் இந்த மகிந்த ராஜபக்ச? சொத்துக்கள் எவ்வளவு?
இலங்கை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இப்போதுதான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மகிந்த ராஜபக்ச. யார் இந்த மகிந்த ராஜபக்ச. மக்கள் ஏன் அவர் மீது அவ்வளவு கோபம்.
இலங்கை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இப்போதுதான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மகிந்த ராஜபக்ச. யார் இந்த மகிந்த ராஜபக்ச. மக்கள் ஏன் அவர் மீது அவ்வளவு கோபம்.
2009ல் விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டபோது ராஜபக்சேவை கொண்டாடி அரியணையில் மீண்டும் மீண்டும் அமரவைத்த மக்கள் ஏன் இப்போது வெளியேறு மகிந்தா என்று கோஷமிடுகின்றனர். இதற்கு வரலாற்றில் கொஞ்சம் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
ராஜபக்சவின் குடும்பக் கதை என்ன?
இலங்கையின் ஹம்பந்தோட்டா மாவட்டத்தில் தான் நிலபுலங்களுடன் அதிகாரம் மிக்க குடும்பமாக ராஜபக்சவின் குடும்பம் இருந்துள்ளது. டான் டேவிட் ராஜபக்ச.. இவர் தான் மகிந்த ராஜபக்சவின் தாத்தா. அவர் பெரிய நிலக்கிழார். மகிந்தவின் பெரியப்பா டான் மேத்யூ ராஜபக்ச தான் இலங்கை அரசியலில் முதல் அடியை எடுத்து வைத்தார். ராஹபக்ச என்ற பெயரும் அப்போதுதான் அந்நாட்டு மக்களுக்கு அறிமுகமாகிறது. அவருக்குப் பின்னர் அவரது இளைய சகோதரும் பசில் ராஜபக்சவின் தந்தையுமான டான் ஆல்வின் ராஜபக்ச ஹம்பன்தோட்டா தேர்தலில் வெற்றி பெற்றார் 1959 முதல் 1960 வரை டான் ஆல்வின் ராஜபக்ச இலங்கை எம்.பி.,யாக இருந்தார். டான் ஆல்வினின் வழித்தோன்றல்கள் 9 பேர். இவர்களில் கோத்தபய ராஜபக்சவும், மகிந்த ராஜபக்சவும் இலங்கை அதிபர்களாக பதவி வகித்தவர்கள்.
முதலில் அதிபராக வலம் வந்த மகிந்த அப்புறம் பிரதமரானார். அவரது மகன்கள் பசில் ராஜபக்ச மற்றும் சமல் ராஜபக்சவும் அமைச்சர்களாக இருந்தனர். கோத்தபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ச என குடும்பத்தில் பலரும் அரசியல்வாதிகள்.
கடந்த 2 தசாப்தங்களை மட்டுமே எடுத்துக் கொண்டாலும் கூட அதில் 12 ஆண்டுகள் ராஜபக்ச குடும்பத்தினர் இலங்கை அரசின் அதிபர், பிரதமர், ராணுவ, நிதி அமைச்சர்கள் பதவி தொடங்கி அதிகார வட்டத்திலும் இருக்கின்றனர். கோத்தபய ராஜபக்ச பாதுகாப்பு செயலராக இருந்தபோதுதான் 1 லட்சம் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். மகிந்த தான் ராஜபக்ச குடும்பத்தில் அரசியல் தந்திரியாகக் கருதப்படுகிறார். சமல், பசில் ராஜபக்ச சகோதரர்கள் விவசாயம், துறைமுகம் என மேற்பார்வை செய்து சுருட்டிய பணம் கணக்கில் அடங்காதது எனக் கூறுகின்றனர் அந்நாட்டு மக்கள்.
இலங்கையின் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்..
மகிந்த ராஜபக்ச மூடநம்பிக்கைகளால் நிறைந்தவர். அவர் எப்போது கயிறுகள், தாயத்துகள் என மந்திர சக்திகளை நம்புவார் எனக் கூறப்படுகிறது. மேலும், பல வண்ண ரத்தினக் கற்களால் ஆன மோதிரங்கள், யானை மயிரினால் ஆன மோதிரங்கள் என அவர் குவித்து வைத்திருப்பதால் அவரை அந்நாட்டு ஊடகங்கள் சில லார்டு ஆஃப் தி ரிங்ஸ் என்று விமர்சிப்பதும் உண்டு.
சொத்துக்குவிப்பு:
வெளிநாட்டில் ராஜபக்ச குடும்பம் செய்த முதலீடுகள் கணக்கிலடங்காதவை. உகாண்டா ஏர்லைன்ஸின் ஆறு விமானங்களில் இரண்டு - 800 மில்லியன் டாலர் முதலீட்டில் ராஜபக்சே குடும்பத்திற்கு சொந்தமானது. ஹோலோகிட்டி மூலம் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ராணுவ மற்றும் ரகசிய உபகரண உற்பத்தி நிறுவனமான தேல்ஸ் நிறுவனத்தில் 29% பங்குகளை மகிந்த ராஜபக்ச பெற்றுள்ளார். அவர் இரண்டாவது பெரிய ஒற்றை பங்குதாரர் ஆவார். முதல் உரிமையாளர் பிரபல முன்னாள் பிரிட்டிஷ் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சிலின் மகன்.
பெரேரா & சன்ஸ் (PnS) - நாடு தழுவிய உணவக சங்கிலியில் மகிந்தவின் மகன் நமல் ராஜபக்ச 500 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளார். இந்தியாவின் அதானி குழும பங்குகளில் நமல் ராஜபக்ச 20% முதலீடு செய்துள்ளார். நடிகர் சல்மான் கான் மூலம் பாலிவுட்டில் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளார். இவர் தனது மனைவிக்கு 350 மில்லியன் டாலர் மதிப்பிலான வைரத்தை திருமண பரிசாக வழங்கினார். பட்டர் பூட்டிக் சூப்பர் உணவகம் - கொழும்பில் உள்ள ஒரு ஆடம்பர உணவகம். மகிந்த ராஜபக்சவின் மற்றொரு மகனான யோஷித ராஜபக்ச இங்கு மறைந்திருக்கும் உரிமையாளர். கொலம்பா உணவகத்தில் யோஷித ராஜபக்ச 70% பங்குகளை வைத்துள்ளார். பிஸி பீன் கஃபே - ராஜபக்ச குடும்பத்தினர் பணத்தை முதலீடு செய்த மற்றொரு உணவகம். சீனாவின் பைடு நிறுவனத்தில் யோஷித ராஜபக்ச பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 7 பில்லியன் டாலர். தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம், லிமிடெட் - யோஷித ராஜபக்சவுக்கு சொந்தமானது. இதில் அவருக்கு 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் உள்ளன.
மற்றொரு மகனான ரோஹித ராஜபக்ச Rythm and Blues (RNB) என்ற இரவு விடுதியில் 200 மில்லியன் ரூபாவை முதலீடு செய்து மதுபான உரிமங்களை வழங்கியுள்ளார். விஜய்யின் சர்கார், மாஸ்டர், பிகில் படங்களில் இந்திய நிறுவனங்கள் மூலம் ரோஹித ராஜபக்ச முதலீடு செய்துள்ளார். Naughty America Pornography Companyயில் ரோஹித ராஜபக்ச $20 மில்லியன் முதலீடு செய்துள்ளார். சீஷெல்ஸ் லா டியாகோ தீவில் ஒரு பகுதியை மனைவியின் பெயரில் வாங்கியுள்ளார்.
இவையெல்லாம் மகிந்த குடும்பத்தின் சொத்துக்கள் மட்டுமே. அண்ணன் தம்பிகளின் மற்ற சொத்துக்களையும் சேர்த்தால் இலங்கை மக்களுக்கு வரும் கோபத்தில் நாடே எரியத்தான் செய்யும்.