brazil: பிரேசில் அதிபர் தேர்தலில் லுலா ட சில்வா வெற்றி - 3வது முறையாக அசத்தல்
ஏற்கெனவே 2003, 2006 காலகட்டங்களில் பிரேசில் அதிபராக லுலா ட சில்வா இருந்த நிலையில் மீண்டும் மூன்றாவது முறையாக பிரேசில் அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரேசில் நாட்டு அதிபர் தேர்தலில் லூயிஸ் இனாசியோ லுலா வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். ஏற்கெனவே 2003, 2006 காலகட்டங்களில் பிரேசில் அதிபராக லுலா ட சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டிந்தார். இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக பிரேசில் அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரேஸிலில் அதிபர் தேர்தல் நேற்று (30 அக்டோபர்) நடைபெற்றது. முன்னாள் அதிபர் ஜேர் போல்சொனாரோவுக்குப்
(Jair Bolsonaro) போட்டியாக இடதுசாரி வேட்பாளர் லூலா டா சில்வா (Inacio Lula da Silva) இருந்தார்.
இந்த தேர்தலுக்காக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் லூலா டா சில்வாவுக்கு 50.8% ஆதரவும் ஜேர் போல்சொனாரோவுக்கு 49.2 %ஆதரவும் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் சிறிய அளவு வித்தியாசம் மட்டுமே இருந்ததால் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பதை கடைசி வரை உறுதியாக கூற முடியாத நிலை தான் இருந்தது. 2 வேட்பாளர்களிடையே வெவ்வேறு கருத்தும் கொள்கையும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லூலா 2002ஆம் ஆண்டில் பிரேசிலின் முதல் தொழிலாள வர்க்கத்தை சேர்ந்த அதிபரானார், ஆனால் 2010 இல் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு அவரது தொழிலாளர் கட்சி- worker’s party (PT) ஊழல் மோசடிகளில் சிக்கியது மற்றும் பிரேசிலை ஒரு மிருகத்தனமான மந்தநிலையில் தள்ளியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, லூலா 2018 இல் சிறையில் அடைக்கப்பட்டார் மற்றும் அந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை அவருக்கு தடை விதிக்கப்பட்டது, பின் ஜேர் போல்சோனாரோ வெற்றி பெற்றார்.
முன்னாள் தொழிற்சங்கத் தலைவரான லூலா, அரசுக்குச் சொந்தமான பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோப்ராஸின் அதிகாரிகளிடையே செய்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததை அம்பலப்படுத்திய சர்ச்சைக்குரிய car wash scandal-லில் அவரது பெயர் தோன்றிய பின்னர் முன் எப்போதும் இல்லாத ஆளவுஅரசியல் எழுச்சியை சந்தித்தார்.ஊழலில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2018 அதிபர் தேர்தலில் லூலா போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், 2021 இல், நாட்டின் உச்ச நீதிமன்றம் அந்த முடிவை ரத்து செய்தது, 2018 தீர்ப்பு 77 வயதான தலைவருக்கு எதிராக ஒரு சார்புடையது என்று தீர்ப்பளித்தது.
லூலாவின் 580 நாள் சிறைவாசம் 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முடிவடைந்தது. இந்த ஆண்டு மே மாதம், 1989 ஆம் ஆண்டு முதன்முதலில் ஜனாதிபதி பதவிக்கு முயன்ற லூலா, "உலகம் கண்டிராத மிகப்பெரிய அமைதிப் புரட்சியை" நடத்தி ஜேர் போல்சோனாரோவை தோற்கடிப்பதாக சபதம் செய்து, தனது ஆறாவது ஜனாதிபதித் தேர்தலை அறிவித்தார். பின் நேற்று அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. கடைசி வரை யார் பிரதமராக போகிறார் என்பது புதிராகவே இருந்தது. நூல் இழை வித்தியாசத்தில் லூலா டி சில்வா வெற்றி பெற்றார்.
watch video: 3 முதல் 80 வயது வரை... இப்படியும் ஒரு கின்னஸ் சாதனையா? - ஜப்பானில் ஒரு விநோதம்
வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான விஷயம் இதுதாங்க...எலான் மஸ்க் ஜாலி ட்வீட்