Israel Hamas War: ”இங்கு போர் நடந்துகொண்டிருக்கிறது; பேச்சுவார்த்தைக்கு இடமில்லை” - இஸ்ரேல் திட்டவட்டம்..
இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நடைபெறும் இந்த நேரத்தில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லையர் ஹையாத் தெரிவித்துள்ளார்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நடந்து கொண்டிருக்கிறது என்றும் பேச்சுவார்த்தைக்கான நேரம் கிடையாது என்றும் இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லையர் ஹையாத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. 1948-ஆம் ஆண்டு தனி நாடாக இஸ்ரேல் உருவானதில் இருந்தே இந்த பிரச்சனை நீடித்து வருகிறது. இஸ்ரேல், பாலஸ்தீன விவகாரமே மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கும் என்றெல்லாம் சொல்வது உண்டு. கிழக்கு ஜெருசலேம், காசா, வெஸ்ட் பேங்க் ஆகிய பகுதிகளில் வாழும் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையேதான் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இஸ்ரேலுடன் பலமுறை போரிட்ட பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் காஸாவை ஆட்சி செய்து வருகிறது. இந்த ஹமாஸ் குழுவினருக்கும் இஸ்ரேலுக்கும் தான் தற்போது போர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இதில் கட்டடங்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் தரைமட்டமானது. ஏராளமான மக்கள் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதலை தொடங்கியுள்ளது. இரு தரப்பினருக்கும் நடைபெற்று வரும் போரில் இதுவரை 1200 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாலஸ்தீன குழுவினரை தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள இஸ்ரேல் காசா முனை பகுதியில் ஆயிரக்கணக்கான படை வீரர்களை அனுப்பி வைத்துள்ளது.
#WATCH | Israel-Palestine conflict | When asked about any consideration of the possibility of retaking Gaza in order to prevent further terrorist attacks on Israel, Israeli Ministry of Foreign Affairs spokesperson, Lior Haiat says, "...I won't go into too many details. Israel and… pic.twitter.com/Fqt9OqMrsa
— ANI (@ANI) October 9, 2023
இந்நிலையில் இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லையர் ஹயாத் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் இது இல்லை என கூறியுள்ளார். மேலும், இஸ்ரேல் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்காக காஸாவை மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஏதேனும் பரிசீலிக்கப்படுமா என்ற கேள்விக்கு, "நான் அதிக விவரங்களை செல்லமாட்டேன். இஸ்ரேல் மற்றும் ஐ.டி.எஃப். பாதுகாப்பை மீட்டெடுக்க என்ன வேண்டுமானாலும் செய்யும். இஸ்ரேலிய குடிமக்களைத் தாக்கும் இந்தத் திறனை ஹமாஸ் பெற அனுமதிக்க மாட்டோம்.
#WATCH | Israel-Palestine conflict | Israeli Ministry of Foreign Affairs spokesperson Lior Haiat says, "We are not negotiating with anyone this time. We are in a war and I think that this is not a time for negotiation and mediation. We are still trying to secure our border to… pic.twitter.com/zCAEC8w7YD
— ANI (@ANI) October 9, 2023
இந்த முறை யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நாங்கள் ஒரு போரில் இருக்கிறோம், இது பேச்சுவார்த்தை மற்றும் மத்தியஸ்தத்துக்கோ நேரம் அல்ல என்று நினைக்கிறேன். இஸ்ரேலிய பிரதேசத்தில் வேறு ஹமாஸ் பயங்கரவாதிகள் இருக்கிறார்களா என்பதைக் கண்டறியவும், அப்பகுதியில் காயமடைந்தவர்களைக் கண்டறியவும் எங்கள் எல்லையைப் பாதுகாக்க நாங்கள் இன்னும் முயற்சி செய்கிறோம்” என தெரிவித்துள்ளார்.