ஆசியாவின் மிகப்பெரிய யானை ராஜா மரணம்! இலங்கை அரசு தேசிய பொக்கிஷமாக பாதுகாக்க முடிவு!
ஆசியாவிலேயே மிகப் பெரிய யானை என்ற பெருமைக்குச் சொந்தகாரர் ராஜா என்ற யானை இலங்கையில் மரணம்.
ஆசியாவிலேயே மிகப் பெரியது என்ற பெருமையை உடைய இந்திய யானை, இலங்கையில் மரணம் அடைந்ததுள்ளது. பேருயிரின் மறைவுக்கு இலங்கை அரசு துக்கம் அனுசரித்துள்ளது.
ஆசியாவிலேயே மிகப் பெரிய யானை என்ற பெருமைச் சொந்தகாரர் ராஜா என்ற யானை. 69 வயதாகும் இந்த யானை கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் நகரில் பிறந்தது.
இந்த யானையை இலங்கையில் வசிக்கும் டாக்டர் ஹர்ஸா தர்ம விஜய என்பவர் வளர்த்து வந்தார். இந்த யானை 11.1 அடி உயரம் கொண்டது. கடந்த, சில ஆண்டுகளாக நடுங்கமுவே என்ற இடத்தில் இருந்து கண்டி பகுதிக்கு 90 கி.மீ., தூரம் நடந்தே செல்லும் ராஜா, உலகப் புகழ் பெற்ற ஊர்வலத்தில், புத்தரின் பல் இருக்கும் பேழையை தூக்கிச் செல்லும் பணியை செய்து வந்தது. இதனால் மக்களுக்கு இந்த யானை மிகவும் ப்ரியமான ஒன்றாக ஆகிபோனது. இலங்கை மக்கள் அனைவருக்கும் ராஜா மீது மிகவும் பாசமாக இருந்து வந்தனர். ராஜாவை கொண்டாடி மகிழ்ந்தனர் மக்கள்.
இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக இலங்கையில் உள்ள கம்பஹா என்ற மாவட்டத்தில் ராஜா நேற்று மரணம் அடைந்தது. யானையின் மரண செய்தி அறிந்து இலங்கை மக்கள் மிகவும் வேதனை அடைந்தனர்.
இலங்கை அரசும் பெருமைமிகு யானையின் மறைவுக்கு துக்கம் அனுசரித்தது மரியாதை செலுத்தியது. இறந்த யானை ராஜாவை வருங்கால தலைமுரையினர் அறிந்து கொள்ளும் விதமாக, ராஜாவின் உடலை தேசிய பொக்கிஷமாக பாதுகாக்க இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
පුරා වසර ගණනාවක් තිස්සේ දෙස් විදෙස් ජනතාවගේ ගෞරව බහුමානයට පාත්ර වී සිටි හස්ති රාජයාණෙනි, දළදා මාලිගාවෙහි සධාතුක කරඬුව ගෞරවයෙන් වඩමවා සිදු කර ගත් උතුම් කුසලයෙහි ආනුභාවයෙන් ඉදිරි ආත්මභවයක උතුම් නිර්වාණය සාක්ෂාත් කර ගැනීමට හැකි වේවා!යි ප්රාර්ථනා කරමි. pic.twitter.com/YLCLsjLV0G
— Gotabaya Rajapaksa (@GotabayaR) March 7, 2022
Watch Video: போலாம் ரைட் ரைட்... டயருடன் விளையாடும் யானை- வைரல் வீடியோ !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்