Sun Breaks: உடைந்தது சூரியனின் மேற்பரப்பு.. அச்சத்தில் உறைந்த விஞ்ஞானிகள்..! பூமிக்கு ஆபத்தா?
சூரியன் பற்றிய ஆய்வுகள் வானியலாளர்களை தொடர்ந்து ஆச்சரியப்படுத்தி வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தற்போது நிகழ்ந்துள்ள சம்பவம் விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூரியன்:
பூமியில் உள்ள உயிரினங்கள் இயங்குவதற்கு மிக முக்கிய காரணம் சூரியன். சூரிய குடும்பத்தின் மையமாக திகழும் சூரியன் ஒரு நட்சத்திரம் ஆகும். தீப்பிழம்புகளால் ஆன உருண்டை போல காட்சி அளிக்கும் சூரியனின் மையத்தில் நிகழும் அணுக்கரு இணைவு காரணமாக அது தொடர்ந்து ஆற்றலை வெளிப்படுத்தி வருகிறது.
சூரியனின் நிறை 73 சதவிகிதம் ஹைட்ரஜனைக் கொண்டுள்ளது. மீதமுள்ளவை கிட்டத்தட்ட 25 சதவிகிதம் ஹீலியம் வாயுவால் ஆனது. ஆக்சிஜன், கார்பன், நியான் மற்றும் இரும்பு உள்ளிட்ட மிகக் குறைந்த அளவிலான கனமான தனிமங்களையும் கொண்டுள்ளது.
உடைந்ததா?
சூரியன் பற்றிய ஆய்வுகள் வானியலாளர்களை தொடர்ந்து ஆச்சரியப்படுத்தி வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தற்போது நிகழ்ந்துள்ள சம்பவம் விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சூரியனின் ஒரு பெரிய பகுதி அதன் மேற்பரப்பில் இருந்து உடைந்து அதன் வட துருவத்தை சுற்றி ஒரு சூறாவளி போன்ற சுழற்சியை உருவாக்கியுள்ளது.
இப்படிப்பட்ட சம்பவம் எப்படி நடந்தது என்பதை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சூரியனின் ஒரு பகுதி அதன் மேற்பரப்பில் இருந்து உடைந்தது தொடர்பான வீடியோ வெளியாகி விஞ்ஞான உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் இந்த நிகழ்வை பதிவு செய்துள்ளது.
விண்வெளி வானிலை முன்னறிவிப்பாளரான டாக்டர் தமிதா ஸ்கோவ், இந்த நிகழ்வு தொடர்பான தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். வளிமண்டலத்தில் மின்காந்த கதிர்வீச்சை சூரியன் தொடர்ந்து வெளிப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. இதனை ப்ராமினன்ஸ் என அழைக்கிறோம். இப்படி, சூரியன் மின்காந்த கதிர்வீச்சை வெளியிடுவதால் பூமியில் தகவல் தொடர்பு பாதிக்கும் அபாயம் உள்ளது.
பூமிக்கு ஆபத்தா?
எனவே, சூரியனில் ஒரு பகுதி உடைந்திருப்பதால் விஞ்ஞானிகள் கவலை கொண்டுள்ளனர். துருவச் சுழல் என்பது பூமியின் இரு துருவங்களையும் சுற்றியுள்ள குறைந்த அழுத்தம் மற்றும் குளிர்ந்த காற்றின் ஒரு பெரிய பகுதி. இது எப்போதும் துருவங்களுக்கு அருகிலேயே ஏற்படும். ஆனால். கோடையில் பலவீனமடைந்து குளிர்காலத்தில் வலுவடையும் தன்மை கொண்டுள்ளது.
இது தொடர்பாக ட்விட்டரில் விரிவாக எழுதியுள்ள டாக்டர் தமிதா ஸ்கோவ், "துருவ சுழல் பற்றி பேசுவோம். வடக்கு ப்ராமினன்ஸ் பகுதியில் இருந்த பொருள் முக்கிய மேற்பரப்பு பகுதியில் இருந்து உடைந்துள்ளது. அது, இப்போது நமது நட்சத்திரத்தின் வட துருவத்தைச் சுற்றி ஒரு பெரிய துருவச் சுழலில் சுற்றுகிறது. இங்கு 55 டிகிரிக்கு மேல் சூரியனின் வளிமண்டல இயக்கவியலைப் புரிந்துகொள்வதற்கான தாக்கங்களை மிகைப்படுத்த முடியாது" என பதிவிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும் சூரியனில் இருந்து வெளியாகும் பெரிய பிரகாசமான பகுதி, விஞ்ஞான உலகை பல முறை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.