Nasa On New Planet | ’நம்ம விண்மீன் மண்டலத்தைத் தாண்டி ஒரு புது கிரகம்!’ நாசா போட்ட ட்வீட்..
பூமி இருக்கும் மில்கிவே கேலக்ஸியில் இருந்து 28 மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கும் மெஸ்ஸியர் M51 கேலக்ஸியில் ஆய்வாளர்கள் இந்த கோளை கண்டுபிடித்துள்ளனர்.
நமது சூரியக் குடும்பம் இருக்கும் மில்கிவே கேலக்ஸியில் இருந்து சுமார் 28 மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் ஒரு புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை சந்திரா விண்வெளி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் பகிர்ந்துள்ளனர். பூமி இருக்கும் மில்கிவே கேலக்ஸியில் இருந்து 28 மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கும் மெஸ்ஸியர் M51 கேலக்ஸியில் ஆய்வாளர்கள் இந்த கோளை கண்டுபிடித்துள்ளனர்.இதுகுறித்து நாசா ட்வீட் செய்துள்ளது.
NEW: Scientists may have detected evidence of a planet candidate orbiting a star outside our Milky Way galaxy for the first time. The exoplanet could be about the size of Saturn: https://t.co/yoeFcGn2RK
— NASA (@NASA) October 25, 2021
Have questions? Head over to @ChandraXRay for a Q&A. pic.twitter.com/TWNWKqnoMb
இந்த கோளின் பெயர் M51-ULS-1b, இதன் மூலம் நாங்கள் ஒரு புதிய உலகத்தையே ஆய்வுக்காகத் திறந்திருக்கிறோம் என இந்த கோளை கண்டிபிடிப்பதற்கான ஆய்வுக்குத் தலைமையேற்ற ரோஸேன் டி ஸ்டேஃபானோ என்கிற ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
பல்வேறு கோள்களைக் கண்டுப்பிடிக்கப் பயன்படுத்தப்படும் கோள்களின் பயனப்பாதையை தொடரும் முறை கொண்டு இந்தக் கோளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதற்காக ஐரோப்பிய வான்வெளி ஆய்வு நிறுவனத்தின் எக்ஸ் எம் எம்-நியூட்டன் ஸ்பேஸ் டெலஸ்கோப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதன்முதலில் விண்வெளிக்கு அப்பால் ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டது 1992ல் அதன்பிறகு பூமியிலிருந்து சுமார் 3,000 ஒளி ஆண்டுகள் தாண்டிதான் பெரும்பாலான கோள்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.