Naseem Shah: பிரபல கிரிக்கெட்டர் வீட்டில் துப்பாக்கிச்சூடு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்! போலீசார் விசாரணை
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவின் வீட்டில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவின் வீட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை, லோயர் டிர், மாயரில் உள்ள நசீம் ஷாவின் வீட்டின் பிரதான வாயிலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பிரதான வாயில், ஜன்னல் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் ஆகியவையும் தாக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் செய்தி நிறுவனமான தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனின் தகவல், "பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவின் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பிரதான நுழைவாயில், ஜன்னல் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் குண்டுகள் வீசப்பட்டன. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஐந்து சந்தேக நபர்களை கைது செய்தனர். மாயர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று போலீசார் தெரிவித்தனர்.
Militants opened fire at the house of the national cricket team fast bowler @iNaseemShah in Lower Dir. The firing has damaged the main gate, windows, and a vehicle partially. However, Police reached the scene immediately, but the attackers managed to escape. pic.twitter.com/jgLVfatBi4
— Jawad Yousafzai (@JawadYousufxai) November 10, 2025
வீடியோவில், தோட்டாக்களின் தாக்குததால் வீட்டு வாயிலில் ஏராளமான துளைகள் ஏற்பட்டுள்ளதையும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கருப்பு காரின் கூரை சேதமடைந்துள்ளதையும் காணலாம். சமூக ஊடகங்களில் வெளியான ஒரு தகவல்படி, போலீசார் வந்த நேரத்தில், தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டனர்.
சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தாக்குதலுக்கான காரணம் விரைவில் கண்டறியப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஷாவும் ஒருவர். நசீம் ஷா 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார்






















