வாடகை வீடு போதும்.. இனி கூடாரம்தான் வீடு! கைக்குழந்தையுடன் கூடார வீட்டுக்குச் சென்ற தம்பதி!
வாடகைவீட்டுக்கே பல ஆயிரங்களை கொடுக்க வேண்டி இருந்ததால் ஒரு குடும்பம் கூடாரம் அமைத்து நாட்களை ஓட்டி வருகின்றனர்
நாம் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் தேவையானது 3 விஷயம்தான் என்பார்கள். உண்ண உணவு, வசிக்க இடம்,உடுத்த உடை. இவை மூன்றும் தடையின்றி இருந்தால் அது நல்ல வாழ்க்கைத்தான் எனக் கூறுவோரும் உண்டு. இப்போதெல்லாம் பலரும் கிடைக்காமல் அல்லல்படுவது வீடுதான். குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் சொந்த வீடு என்பது பலருக்கும் கனவுதான். வாடகை வீட்டுக்கே பல ஆயிரங்களை கொடுக்க வேண்டிய நிலைதான் உள்ளது. இப்படியான வீட்டு சிக்கலால் ஒரு குடும்பம் கூடாரம் அமைத்து நாட்களை ஓட்டி வருகின்றனர்
பிரிட்டனைச் சேர்ந்த ஒரு ஜோடி ஒரு வருடத்துக்கு மேலாக மலைகளில் கூடாரம் அமைத்து வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். அந்தக் கூடாரத்தில் அவர்கள் மட்டுமே இல்லை. 6 மாதக்குழந்தையும், 3 வயது சிறுமியும் உள்ளனர்.
Guinness World Record: மேலும் 3 கின்னஸ் சாதனைகளைப் படைத்தார் உலகின் உயரமான பெண்மணி!
கணவன் மனைவியுமான ஜென் மற்றும் சிம் வழக்கமான வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர். ஆனால் இடையே கணவன் வேலையிழந்த நிலையில் சிம்மும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். வேலை இல்லாத நேரத்தில் இவர்களால் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவது மிகவும் கடினமாக இருந்துள்ளது. வேலை இழந்து சரியாக 5 மாதத்தில் சிம்முக்கு குழந்தை பிறந்துள்ளது. அடுத்தடுத்து செலவு அதிகமானதால் தம்பதியால் சமாளிக்க முடியாமல் திணறியுள்ளனர்.
கிரெடிட் கார்டுகள் கைகொடுத்தாலும் அடுத்த மாதம் வங்கிகளுக்கு பணம் செலுத்த வேண்டிய கட்டாயம், இதற்கிடையே மாதம் 800 டாலர்கள் வாடகை கொண்ட வீடு பெரிய சுமையாக இருந்துள்ளது. இதனால் திட்டமிட்ட தம்பதி வீட்டைவிட்டு கூடாரத்தில் தங்கினால் என்னவென திட்டமிட்டுள்ளனர். இதற்காக சற்று பெரிய உறுதியான கூடாரத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். குளிர்,வெயிலுக்கு ஏற்ப அதனை தயார் செய்துள்ளனர். ஒரு அழகான சிறிய வீட்டையே கூடாரம் மூலம் உருவாக்கியுள்ளனர்.
மார்பகம், உதட்டில் ஆபரேஷன்.. பார்பி பொம்மைபோல மாறுவதற்கு ரூ.50 லட்சம் செலவுசெய்த இளம்பெண்
வீட்டு வாடகை இல்லை, கரண்ட் பில் இல்லை, பெட்ரோல் செலவு இல்லை என பல செலவுகளை இந்த தம்பதி குறைத்துள்ளது. இந்த கூடார வீடு அவர்களது 3 வயது மகளுக்கும் பழகிவிட்டதாகவும்,குழந்தைகளுக்கு ஏதுவாக நிறைய புத்தகங்கள், விளையாட்டு சாமான்கள், பொம்மைகளும் வீட்டில் இருப்பதால் சிக்கல் இல்லை என்கிறது அந்த தம்பதி.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்