மேலும் அறிய

Guinness World Record: மேலும் 3 கின்னஸ் சாதனைகளைப் படைத்தார் உலகின் உயரமான பெண்மணி!

ஏற்கனவே இரண்டு கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ள ருமேயாவின் பட்டியலில் மேலும் மூன்று கின்னஸ் சாதனைகள் சேர்ந்துள்ளது

உலகின் மிக உயரமானப் பெண்மணி என்று கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ருமேயா கெல்கி மேலும் 3 உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.

215.16 செ.மீ அதாவது 7 அடி 0.7 இன்ச் உயரம் கொண்ட ருமேயா கெல்கி உலகின் மிக உயரமான வாழும் பெண்மணி என்று கடந்த 2021ம் ஆண்டு கின்னஸ் நிறுவனத்தால் இரண்டாவது முறையாக அங்கீகரிக்கப்பட்டார். Weaver syndrome என்ற மிக அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட ருமேயா மிக உயரமாக வளர ஆரம்பித்தார். இதற்கு முன்பாக 2014ம் ஆண்டு அவருக்கு 18 வயது ஆகியிருந்தபோது, உலகின் மிக உயரமான இளம்பெண் என்று கின்னஸ் நிறுவனத்தால் முதல் முறையாக அங்கீகரிக்கப்பட்டிருந்தார்.

Guinness World Record: மேலும் 3 கின்னஸ் சாதனைகளைப் படைத்தார் உலகின் உயரமான பெண்மணி!

துருக்கி நாட்டைச் சேர்ந்தவரான ருமேயாவால் எழுந்து நீண்ட தூரம் நடக்க முடியாது. இதனால் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை வீல் சேரில் கழிக்கும் ருமேயாவால்,  வாக்கரின் உதவியுடன் தான் நடக்கவும் முடியும். அதுவும் நீண்ட தூரத்திற்கு இல்லை. குறிப்பிட்ட தூரம் சென்ற பின் உட்கார வேண்டும் என்ற அளவிற்கு தான் அவரது உடல் நிலை உள்ளது. 1997 ஜனவரி 1ம் தேதி பிறந்த ருமேயா வழக்கறிஞர், ஆய்வாளர் மற்றும் front end developer ஆக உள்ளார்.

Guinness World Record: மேலும் 3 கின்னஸ் சாதனைகளைப் படைத்தார் உலகின் உயரமான பெண்மணி!

ஏற்கனவே இரண்டு கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ள ருமேயாவின் பட்டியலில் மேலும் மூன்று கின்னஸ் சாதனைகள் சேர்ந்துள்ளது. 11.2 செ.மீ நீளம் கொண்ட விரல்களைக் கொண்டுள்ள ருமேயா, நீளமான விரல்களைக் கொண்ட வாழும் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 24.93 செமீ நீளத்திற்கு ருமேயாவின் வலது கை வளர்ந்துள்ளதால் உயரமான கைகளைக் கொண்ட வாழும் பெண்மணி என்ற நான்காவது கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். 59.90 செ.மீ அளவுக்கு நீளமான முதுகைக் கொண்டிருப்பதால் நீளமான முதுகைக் கொண்டிருக்கும் வாழும் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ருமேயா. 

Guinness World Record: மேலும் 3 கின்னஸ் சாதனைகளைப் படைத்தார் உலகின் உயரமான பெண்மணி!

இந்த மூன்று புதிய கின்னஸ் சாதனைகள் மூலம் மொத்தமாக ஐந்து கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரராகியிருக்கிறார் ருமேயா. “உயரமாக இருப்பதற்காக நான் என் சிறுவயதில் பலமுறை கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறேன். ஆனால், எனது உயரம் தான் எனக்கு கின்னஸ் சாதனையை வாங்கிக்கொடுத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

இதில் ஆச்சர்யப்படத்தக்க விஷயம் என்னவெனில், உலகின் மிக உயரமான மனிதர் என்று கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட, 8 அடி 2.8 இன்ச் உயரம் கொண்ட சுல்தான் கொசேனும் துருக்கியைச் சேர்ந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Box Office Prediction : இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Embed widget