மார்பகம், உதட்டில் ஆபரேஷன்.. பார்பி பொம்மைபோல மாறுவதற்கு ரூ.50 லட்சம் செலவுசெய்த இளம்பெண்
பார்பி பொம்மை போன்று இருக்க வேண்டும் என ரூ. 50 லட்சத்திற்கும் மேல் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்தும், இந்த தோற்றம் தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என இளம்பெண் கூறுகிறார்
பார்பி பொம்மை போன்று இருக்க வேண்டும் என 50 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்தும், இந்த தோற்றம் தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என இளம்பெண் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த இளம்பெண் ஜெசிக்கு சிறுவயது முதலே பார்பி பொம்மை மேல் ஆசை அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு,பார்பி பொம்மையை போன்று மாற வேண்டும் என அவருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது.
பார்பி பொம்மை
உலக முழுவதும் மக்களிடத்தில் பார்பி பொம்மைகள் மீதான விருப்பம் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக பெண்கள் மத்தியில் பார்பி பொம்மைகள் மீதான பிரியம் அதிகம். இதனால் பார்பி பொம்மைகள் தயாரிப்பதற்காக பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.
மகிழ்ச்சி அளிக்கவில்லை
இந்நிலையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜெஸ்சி, பார்பி பொம்மையை போல் ஆக வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். இதற்காக மார்பகங்களை 3 முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் மேலும் மூக்கு, உதடு மற்றும் உடலின் பின் பாகங்கள் உள்ளிட்டவற்றை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா டாலர் மதிப்பில் சுமார் 70 ஆயிரம் டாலர்களை செலவு செய்து உள்ளார்(இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 53 லட்சம் வரை). இது குறித்து அவர் கூறுகையில் அறுவை சிகிச்சை செய்த பிறகு, இந்த தோற்றம் தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என கூறியுள்ளார்
View this post on Instagram
குடும்பத்தினர் பேசுவதில்லை
பார்பி போன்ற தோற்றத்தை போன்று மாற வேண்டும் எண்ணத்திற்கு, ஆரம்ப முதலே குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக ஜெசிக்கா தெரிவித்துள்ளார். தற்போது குடும்பத்தினர் யாரும் தன்னுடன் முற்றிலுமாக பேசுவதை நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது சகோதரர், தாத்தா மற்றும் பாட்டியுடன் பேசாமல் இருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளதாக ஜெசி கூறியுள்ளார்.
ஜெஸ்சிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.அவரது புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவேற்றம் செய்து கொண்டும் வந்துள்ளார். இந்நிலையில் தனது புதிய தோற்றம் மகிழ்ச்சி அளிக்கவில்லை என தெரிவித்திருப்பது, அவரது ரசிகர்களுக்கு மிகுந்த கவலையை அளித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்