PowerPoint: 90ஸ் கிட்ஸ் வியந்து பார்த்த பவர்பாயிண்ட்டை உருவாக்கிய டென்னிஸ் ஆஸ்டின் உயிரிழப்பு
90ஸ் கிட்ஸ் பார்த்து வியந்த ஒரு சில விஷயங்களில் ஒன்று பவர்பாயிண்ட் பிரசன்டேஷன்.
90ஸ் கிட்ஸ் பார்த்து வியந்த ஒரு சில விஷயங்களில் ஒன்று பவர்பாயிண்ட் பிரசன்டேஷன். கிராபிக்ஸ் மற்றும் வீடியோக்களின் வழியாக விளக்கக்காட்சியை அனைவரையும் கவரும் வகையில் தருவது பவர்பாயிண்ட். ராபர்ட் காஸ்கின்ஸ் என்பவர், டென்னிஸ் ஆஸ்டினுடன் இணைந்து இதை உருவாக்கினார்.
90ஸ் கிட்ஸ் பார்த்து வியந்த பவர்பாயிண்ட் பிரசன்டேஷன்:
2000இன் தொடக்கத்தில் மிகவும் பிரபலமாக இருந்த பவர்பாயிண்ட் பிரசன்டேஷனை உருவாக்கிய டென்னிஸ் ஆஸ்டின், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி கலிபோர்னியாவின் லாஸ் ஆல்டோஸில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு வயது 76. அவரது மகன், மைக்கேல் ஆஸ்டின், வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட டென்னிஸ் ஆஸ்டினின் மூளைக்கும் புற்று நோய் பரவியது" என்றார்.
இதையும் படிக்க: Siren First Look: கத்தியும் கருப்பு சாயாவும்...! மிரட்டலாக சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் ஜெயம் ரவி! பிறந்தநாளில் செம்ம அப்டேட்!
எம்.ஐ.டி மற்றும் யுசி சான்டா பார்பரா உட்பட பல பல்கலைக்கழகங்களில் பொறியியல் பயின்றவர் டென்னிஸ் ஆஸ்டின். இதை தொடர்ந்து, மென்பொருள் நிறுவனமான Forethought இல் மென்பொருள் உருவாக்குநராக இணைந்து, பவர்பாயிண்டை இணைந்து உருவாக்கினார். கடந்த 1987 ஆம் ஆண்டு, பவர்பாயிண்ட் மென்பொருளை Forethought நிறுவனம் அறிமுகம் செய்தது.
பவர்பாயிண்ட் மூலம் உருவாக்கப்படும் 30 மில்லியனுக்கும் அதிகமான பிரசன்டேஷன்
மைக்ரோசாப்ட் நிறுவனம் சில மாதங்களுக்குப் பிறகு, அதை 14 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. கடந்த 1985 முதல் 1996 வரை பவர்பாயின்ட்டின் முதன்மை டெவலப்பராக இருந்தார். பின்னர், ஓய்வு பெற்றார். 1993 வாக்கில், விற்பனையின் மூலம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமான விற்பனையை ஈட்டியது.
இதனை தொடர்ந்து, வேர்ட், பவர்பாயிண்ட் உள்ளிட்டவற்றை தன்னுடைய ப்ரோகிராம்களில் ஒன்றாக மைக்ரோசாப்ட் இணைத்தது. இறப்பதற்கு முன்பு, பவர்பாயிண்டை உருவாக்கிய வரலாறு குறித்து பகிர்ந்து கொண்ட டென்னிஸ் ஆஸ்டின், "எங்கள் பயனர்கள் கணினிகளை நன்கு அறிந்திருந்தனர். ஆனால், கிராபிக்ஸ் மென்பொருள் குறித்து தெரிந்திருக்கவில்லை.
பவர்பாயிண்டில் ஒவ்வொரு நாளும் 30 மில்லியனுக்கும் அதிகமான விளக்கக்காட்சிகள் உருவாக்கப்படுகின்றன. பெருநிறுவன நிர்வாகிகள், வணிகப் பள்ளிகள், பேராசிரியர்கள், ராணுவ ஜெனரல்கள் ஆகியோர் இந்த மென்பொருளை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1947 ஆம் ஆண்டு, மே 28 ஆம் தேதி, பிட்ஸ்பர்க்கில் பிறந்த ஆஸ்டின், வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தார்.
தான் எழுதிய 'Sweating Bullets: Notes about Inventing PowerPoint' புத்தகத்தில் ஆஸ்டின் குறித்து குறிப்பிட்ட ராபர்ட் காஸ்கின்ஸ், "வடிவமைப்பு தொடர்பான பாதிக்கும் மேற்பட்ட யோசனைகள் டென்னிஸிடம் இருந்துதான் வந்தது" என்றார்.