மேலும் அறிய

Siren First Look: கத்தியும் கருப்பு சாயாவும்...! மிரட்டலாக சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் ஜெயம் ரவி! பிறந்தநாளில் செம்ம அப்டேட்!

நடிகர் ஜெயம் ரவி இதுவரை நடித்திராத ஒரு தோற்றத்தில், சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் மிரட்டலாக காட்சியளிக்கிறார்.

ஜெயம் ரவியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் போஸ் கொடுக்கும் ‘சைரன்’ படத்தின் ஃப்ரீபேஸ் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

அண்மையில் ஜெயம்ரவியின் நடிப்பில் வரவுள்ள ’தனி ஒருவன் 2’ படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 8 ஆண்டுகளுக்கு பிறகு தனி ஒருவன் 2 படத்தின் அப்டேட் வெளியானதால் வில்லன் யார் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இன்று ஜெயம்ரவி பிறந்த நாளை கொண்டாடுவதை ஒட்டி, அவர் நடிக்கும் சைரன் படத்தின் ஃப்ரீபேஸ் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இதுவரை தான் நடித்திடாத ஒரு வித்யாசமான கேரக்டரில் ஜெயம் ரவி நடித்துள்ளதை போஸ்டரே கூறுகிறது. 

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரம் மற்றும் வித்தியாசமான கதைகளங்களால் ரசிகர்களை மகிழ்வித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. அவரது ரசிகர்களுக்கு பிரத்தியேக விருந்தாக, சைரன் படத்தில் அவர் நடித்திருக்கும் வித்தியாசமான கேரக்டரின் ஃப்ரீபேஸ் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வெறும் போஸ்டராக இல்லாமல் ஆச்சர்யம் தரும் ஒரு சிறு வீடியோவாக இந்த ஃப்ரீபேஸ் லுக்கை  வெளியிட்டப்பட்டுள்ளது. 

அந்த போஸ்டரில், திரைப்பயணத்தில் நடிகர் ஜெயம் ரவி இதுவரை நடித்திராத ஒரு தோற்றத்தில், சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் மிரட்டலாக காட்சியளிக்கிறார். ஃப்ரீபேஸ் லுக்கில் அனுபவம், அமைதியும் கலந்த தோற்றத்தில், பார்க்கும்போதே பயம் தரும் கோபமான முகத்துடன், கைவிலங்குடன் கையில் ரத்தம் கொட்டும் வாளுடன் அசத்தலாக அமர்ந்திருக்கிறார் ஜெயம் ரவி.  இதற்கு நேரெதிராக இளமையும் துள்ளலுமான இன்னொரு கேரக்டரிலும் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  

இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், ஜெயம் ரவி நடித்துள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இடை அமைத்துள்ளார். பிரமாண்ட பொருட்செலவில்,  குடும்ப அம்சங்கள்  நிறைந்த, ஆக்சன் திரில்லர் படமாக  சைரன் உருவாகியுள்ளதாகவும், இதில் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்துள்ளதாகவும் படக்கு தெரிவித்துள்ளது. படத்தில் காமெடி மட்டுமுல்லாமல் வித்தியாசமான கேரக்டரில் யோகிபாபுவும், சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. 

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவியின் இந்த மிரட்டலான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க: Jawan Box Office: "இது வெறும் ஆரம்பம்தான்.." வரலாறு காணாத சாதனை படைக்கும் ஜவான்.. ஆனந்தத்தில் அட்லீ..!

Vijay Makkal Iyakkam: உறுப்பினர்களை சேர்க்க புதிய செயலி.. விஜய் மக்கள் இயக்க மகளிர் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு

தலைப்பு செய்திகள்

"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
US Iran War: “48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
“48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Embed widget