India vs Pakistan Score LIVE: பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா.. 228 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி..!
IND vs PAK Asia Cup 2023 LIVE: ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.
LIVE
Background
ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.
ஆசியக்கோப்பை தொடர்:
6 நாடுகள் பங்கேற்ற ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் வெளியேறிய நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாடி வருகின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான லீக் போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் சூப்பர் 4 சுற்றில் இன்று மீண்டும் மோதி வருகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி:
கொழும்புவில் நடைபெற்று வரும் இந்த போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் தொடங்கியது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட் ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதுவதால், இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
சவால்களை தகர்க்குமா இந்தியா ?
லீக் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்நிலையில், இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், கோலி மற்றும் ரோகித் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இந்த இருவரின் செயல்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், கடந்த போட்டியில் பாகிஸ்தானின் மிரட்டலான பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட, நடுகள வீரர்களான இஷான் கிஷன் மற்றும் பாண்ட்யா நம்பிக்கை அளிக்கின்றனர். இன்றைய போட்டியில் கே.எல். ராகுல் களமிறங்கியுள்ளார். பந்துவீச்சை பொருத்தமட்டில் பும்ரா, சிராஜ், தாக்கூர் ஆகியோருடன் ஆல்ரவுண்டர் பாண்ட்யா ஆகியோரையே இந்திய அணி மலைபோல நம்பியுள்ளது. சுழற்பந்துவீச்சில் ஜடேஜா மற்றும் குல்தீப் வலுசேர்க்கின்றனர். நடப்பு தொடரில் இதுவரை நேபாள அணிக்கு எதிராக மட்டுமே இந்திய அணி பந்துவீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா அணி:
ரோஹித் சர்மா, சுப்மான் கில், இஷான் கிஷான், விராட் கோலி, கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
பாகிஸ்தான் அணி:
ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் , முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், பகீம் அஷ்ரப்
பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா.. 228 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி..!
குல்தீப் யாதவ் சுழலில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்த பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
4வது விக்கெட்டையும் பறிகொடுத்த பாகிஸ்தான்.. பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா
பாகிஸ்தான் அணியின் பக்கர் ஜமான் குல்தீப் யாதவ் பந்தில் போல்டானாதால் பாகிஸ்தான் அணி 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
15 ஓவர்களுக்கு 65 ரன்கள்.. பார்ட்னர்ஷிப் அமைக்கும் ஜமான் - சல்மான்..!
பாகிஸ்தான் அணி 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களுடன் ஆடி வருகிறது. பக்கர் ஜமான் - சல்மான் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி வருகின்றனர்.
2 ரன்களில் அவுட்டாகிய முகமது ரிஸ்வான்.. தடுமாறும் பாகிஸ்தான்..!
பாகிஸ்தான் அணியின் முக்கிய பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வான் 2 ரன்களில் ஷர்துல் தாக்கூர் பந்தில் ஆட்டமிழந்தார்.
மீண்டும் தொடங்கியது ஆட்டம்.. விக்கெட் வேட்டையை நடத்துமா இந்தியா..?
இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், மழை நின்றதால் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.