Watch Video: அவங்க வாசிக்க.. நாங்க கேட்க.. அடஅட.. ட்ரம்பட் இசையை ரசித்து கேட்கும் பசுமாடுகள் - வைரல் வீடியோ..!
மாடுகள் இசையை ரசித்து கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இசை இங்கும் எல்லோருக்கும் பொதுவானது. சோகமோ, மகிழ்ச்சியோ, பூரிப்போ எல்லா உணர்ச்சிகளுக்கும் உற்ற துணையாய் இருப்பது இசைதான். ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால் இசை என்பது மனிதர்களுக்கு மட்டுமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அது என்ன வீடியோ என்று கேட்கிறீர்களா?
சேல்ஸ் ஃபோர்ஸ் நிறுவனத்தில், தலைமை டிஜிட்டல் சுவிசேஷகராக ( Chief Digital Evangelist) பணியாற்றும் வாலா அஃப்ஷர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், “ மாடுகள் புல்லை மேய்ந்து கொண்டிருக்கின்றன. அப்போது அங்கு வரும் ஒருவர் ட்ரம்பட் இசைக் கருவியை வாசிக்கிறார்.
அதிலிருந்து வந்த இசை சில மாடுகளை கவனிக்க வைத்தது. தொடர்ந்து அந்த நபருடன் இன்னும் சிலர் இணைந்து தனித்தனியாக கருவிகளை இசைக்க ஆரம்பித்தனர். இந்த இசையை கேட்ட பிற மாடுகளும் இசையை கேட்க முன்வந்தது.
தொடர்ந்து அவர்கள் வாசித்து முடிக்கும் வரை அந்த மாடுகள் இசையை ரசித்துக்கொண்டே இருந்தன. இந்த தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை 3 லட்சத்திற்கு அதிகமானோர் பார்த்துள்ளனர்.
Did you know cows really enjoy music? pic.twitter.com/P5N3QcGdLM
— Vala Afshar (@ValaAfshar) December 25, 2021
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்