Chicken or Egg First: முதல்ல வந்தது கோழியா..? முட்டையா..? ஒரு வழியா கண்டுபிடிச்சுட்டாங்க..!
உலகில் நீண்ட நாட்களாக விடை தெரியாமல் இருந்த கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? என்ற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்கள் பதிலை கண்டுபிடித்துள்ளனர்.
உலகில் நீண்ட நாட்களாக விடை தெரியாமல் இருந்த கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா என்ற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்கள் பதிலை கண்டுபிடித்துள்ளனர்.
தீராத சந்தேகம்:
உலக மக்கள் இடையே பன்னெடுங்காலமாக விடை தெரியாமல் பல கேள்விகள் சுழன்று வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்பது தான். இந்த கேள்வியை வாழ்க்கையில் ஒருமுறையாவது நாம் அனைவரும் எதிர்கொண்டு இருப்போம். ஆனால், விடை என்பது இதுநாள் வரையிலும் தெரியாமலேயே தெரிய வந்தது. காரணம் முதலில் முட்டை தான் வந்தது என்றால் கோழி எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பப்படும். அதே கோழி தான் முதலில் வந்தது என்றால் முட்டை எங்கிருந்து வந்தது என கிடுக்குப்பிடியாக கேள்வி எழுப்பப்படும்.
கிடைத்தது பதில்:
பல ஆண்டுகளாக விடை தெரியாமல் குழப்பத்தை ஏற்படுத்திய அந்த கேள்விக்கு ஒரு வழியாக ஆராய்ச்சியாளர்கள் அறிவியல்பூர்வமாக விடையை கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, கோழி தான் முதலில் வந்தது எனவும் அதைதொடர்ந்தே முட்டை வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
தீவிர ஆராய்ச்சி:
லண்டனின் ஷெபீல்ட் மற்றும் வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் கோழி மற்றும் முட்டை பற்றிய இந்த கேள்வியை ஆழமாக ஆராய்ந்தனர். இந்த ஆய்வின் படி உலகில் முதலில் வந்தது முட்டை அல்ல கோழிதான் என்று கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளனர்.
எப்படி சாத்தியம்..!
ஓவோக்லிடின் என்ற புரதம் கோழி முட்டையின் ஓட்டில் காணப்படுகிறது. இந்த புரதம் இல்லாமல் முட்டைகளை உற்பத்தி செய்ய முடியாது. அது மட்டுமின்றி, கோழியின் கருப்பையில் மட்டுமே இந்த புரதம் உற்பத்தியாகிறது. அந்த வகையில் கோழிதான் உலகிலேயே முதலில் வந்திருக்கும். ஓவோக்லிடின் கோழியின் கருப்பையில் தயாரிக்கப்படும் ஒரு புரதம். பின்னர் இந்த புரதம் முட்டையின் ஓட்டை அடைகிறது என விளக்கமளித்துள்ளனர்.
செல்லின் மூலக்கூறு அமைப்பைப் பார்க்க, ஹெக்டோஆர் எனப்படும் ஹைடெக் கணினியை விஞ்ஞானிகள் குழு பயன்படுத்தியது. கோழியின் உடலில் உள்ள கால்சியம் கார்பனேட்டை கால்சைட் படிகங்களாக மாற்றுவதைத் தொடங்கி, ஓ.சி.-17 ஒரு வினையூக்கியாக செயல்படுவதை அவர்கள் கண்டுபிடித்தனர். இவைதான் குஞ்சு வளரும் போது மஞ்சள் கரு மற்றும் அதன் பாதுகாப்பு திரவங்களை வைத்திருக்கும் கடினமான செல் ஆகும்.
முதலில் குட்டிப்போட்ட கோழிகள்:
லண்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி, இப்போது இருக்கும் ஊர்வன, பரப்பன மற்றும் பாலூட்டிகளின் ஆரம்பகால மூதாதையர்கள் முட்டையிடுவதற்குப் பதிலாக குட்டிகளைப் பெற்றெடுத்திருக்கலாம். குட்டிகளை ஈன்று கொண்டிருந்த சில விலங்குகள் பரிணாம வளர்ச்சியில், முட்டைகளை போடும் உயிரினங்களாக பல மில்லியன் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. எனவே, முதலில் கோழி வரவில்லை, முட்டை தான் வந்துள்ளது.
முதலில் குட்டிகளை போட்டுக்கொண்டிருந்த கோழியின் மூதாதைய உயிரினம் பரிணாம வளர்ச்சியில் முட்டை போடும் கோழிகளாக மாறின. அவை இப்போது முட்டை போட்டு குஞ்சு பொரிக்கின்றன. முதலில் மென்மையாக இருந்த முட்டை ஓடுகள் பரிணாம வளர்ச்சியில் கடினமான ஓடுகளாக மாறியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.