Baltimore Bridge Collapse: கப்பல் மோதி உடைந்த பாலம்.. ஆற்றுக்குள் கவிழ்ந்த கார்கள்.. அமெரிக்கவில் சோகம்..
அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பாலம் உடைந்து விபத்துக்குள்ளானதில் ஏராளமான கார்கள் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் ஆற்றில் விழுந்தனர். பாலம் இடிந்த நிலையில் ஏராளமான கார்கள் ஆற்றில் விழுந்து மூழ்கியது. ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
🚨🇺🇸BREAKING: BALTIMORE BRIDGE COLLAPSE - POSSIBLE MASS CASUALTY EVENT
— Mario Nawfal (@MarioNawfal) March 26, 2024
A large container ship struck the Francis Scott Key Bridge in Baltimore, causing significant parts of it to collapse.
Emergency services are searching for multiple cars and people who may have fallen into… pic.twitter.com/WujjcEOMc7
இந்த விபத்தை தொடர்ந்து பாலத்தின் இரு முனைகளும் அடைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று அதிகாலை 1.35 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும், விபத்து நடந்த இடத்தில் மீட்பு படையினர் சிக்கியுள்ள நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மேயர் தெரிவித்துள்ளார். அதிகாலை நேரத்தில் எதிர்ப்பாராத விதமாக நடந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The Francis Scott Key Bridge in Baltimore, Maryland which crosses the Patapsco River has reportedly Collapsed within the last few minutes after being Struck by a Large Container Ship; a Mass Casualty Incident has been Declared with over a Dozen Cars and many Individuals said to… pic.twitter.com/SsPMU8Mjph
— OSINTdefender (@sentdefender) March 26, 2024