மேலும் அறிய

துரத்தும் போர் குற்றங்கள்...இலங்கை முன்னாள் அதிபர்கள் ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக கனடா தடை...!

உள்நாட்டு போரின் போது மனித உரிமைகளை பாரியளவில் திட்டமிட்டு மீறியமைக்காக நான்கு பேருக்கு எதிராக சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் கனடா தடைகளை விதித்துள்ளது.

இலங்கை முன்னாள் அதிபர்கள் கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச உள்பட நால்வருக்கு எதிராக கனடா அரசு தடை விதித்துள்ளது. சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, லெப்கொமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு எதிராகவும் கனடா தடைகளை அறிவித்துள்ளது.

இலங்கையில் 1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை நடந்த உள்நாட்டு போரின் போது மனித உரிமைகளை பாரியளவில் திட்டமிட்டு மீறியமைக்காக நான்கு பேருக்கு எதிராக சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் கனடா தடைகளை விதித்துள்ளது என அந்நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர் மெலானி ஜொய் தெரிவித்துள்ளார்.

சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளின்படி இந்த நபர்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. 

இது கனடாவில் அவர்கள் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களையும் திறம்பட முடக்கி கனடாவின் குடிவரவு சட்டத்தின் கீழ் அவர்கள் கனடாவிற்குள் நுழைய முடியாதவர்களாக்குகின்றது.

இந்த விவகாரத்தில் இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கனடாவும் சர்வதேச சமூகமும் தொடர்ச்சியாக வேண்டுகோளை விடுத்துள்ள போதிலும் அந்நாட்டு அரசாங்கம் தனது மனித உரிமை சட்டங்களை மட்டுப்படுத்தப்படும் நடவடிக்கைகளையே எடுத்துள்ளது.

இது பாதிக்கப்பட்ட மக்களிற்கான நீதி கிடைப்பதில் முன்னேற்றத்தை தடுக்கின்றது. அமைதி நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகளையும் பாதிக்கின்றது.

மிக மோசமான மனித உரிமைமீறல்களால் பாதிக்கப்பட்ட தப்பிப்பிழைத்தவர்களிற்கு நீதி அவசியம். இதன் காரணமாகவே இலங்கை அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் நடவடிக்கையை உருவாக்குவது குறித்த தனது உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டும் என கனடா வேண்டுகோள் விடுத்து வருகின்றது.

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்த விலக்களிக்கப்படுவதை கனடா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதற்கான உறுதி செய்தி இது எனவும் கனடாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

26ஆண்டு காலமாக, இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகள் இயக்கிற்கும் இடையே நடந்த உள்நாட்டு போரின்போது லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர். இரண்டு தரப்பின் மீதும் போர் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, போரின் இறுதி கட்டத்தில் மோசமான முறையில் மனித உரிமை மீறல்கள் அரங்கேறின.

2007 முதல் 2009 வரையிலான இறுதி கட்ட போரில் தமிழ்மக்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் மீது குற்றம்சாட்டப்படுகிறது. அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புத்துறை செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தலைமையில் இந்த போர் குற்றங்கள் நடந்ததாக உலக நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar Exit Poll: தேர்தல் கருத்து கணிப்பு பலிக்குமா.?  2015, 2020, 2024ஆம் ஆண்டில் சொன்னது என்ன.? நடந்தது என்ன.?
மீண்டும் ஆட்சியில் பாஜக.! கருத்து கணிப்பு பலிக்குமா.? சொன்னதும் இதுவரை நடந்ததும் என்ன.?
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட  ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
Modi TN Visit : ‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆற்றில் குதிக்க ஓடிய திருநங்கை! காப்பாற்றிய பத்திரிகையாளர்கள்! போராட்டத்தின் பின்னணி?
அரியணை ஏறும் பாஜக? ஷாக்கில் தேஜஸ்வி, ராகுல் வெளியான EXIT POLL | Bihar Exit Poll 2025
குடும்பத்தை பிரித்த ஆதவ் தூக்கி எறிந்த திமுக, விசிக விஜய்யை எச்சரிக்கும் சார்லஸ் | Charles Martin on Aadhav Arjuna
வெடித்து சிதறிய சிலிண்டர்கள் தீக்கிரையான டிப்பர் லாரி பரபரக்கும் அரியலூர் பகீர் வீடியோ | Ariyalur Gas Cylinder Lorry Blast
Terrorist Umar Mohammed Profile| பாகிஸ்தானின் SLEEPER CELL பழிதீர்க்க வந்த பயங்கரவாதியார் இந்த உமர்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar Exit Poll: தேர்தல் கருத்து கணிப்பு பலிக்குமா.?  2015, 2020, 2024ஆம் ஆண்டில் சொன்னது என்ன.? நடந்தது என்ன.?
மீண்டும் ஆட்சியில் பாஜக.! கருத்து கணிப்பு பலிக்குமா.? சொன்னதும் இதுவரை நடந்ததும் என்ன.?
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட  ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
Modi TN Visit : ‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
Trump H1B Visa: ”அமெரிக்காட்ட அவ்ளோ திறமை இல்லப்பா” H1B விசா.. உண்மையை போட்டுடைத்த ட்ரம்ப்
Trump H1B Visa: ”அமெரிக்காட்ட அவ்ளோ திறமை இல்லப்பா” H1B விசா.. உண்மையை போட்டுடைத்த ட்ரம்ப்
Ramadoss PMK: முடக்கப்படுமா மாம்பழம் சின்னம்.? ராமதாஸ் எடுத்த முடிவால் அலறும் பாமக நிர்வாகிகள்
முடக்கப்படுமா மாம்பழம் சின்னம்.? ராமதாஸ் எடுத்த முடிவால் அலறும் பாமக நிர்வாகிகள்
TVK VIJAY: ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு ‘பக்கா மாஸ்’ கட்சி வந்திருக்கு- விஜய்
ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு ‘பக்கா மாஸ்’ கட்சி வந்திருக்கு- விஜய்
UPSC Exam Results: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; 2736 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
UPSC Exam Results: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; 2736 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
Embed widget