"வீட்டு வேலைகள், யோகா செய்யும் செல்ல நாய்" : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!
ஆஸ்திரேலிய செப்பர்டு ரக நாயான சீக்ரெட் என்ற செல்ல நாய் தனது எஜமானிக்காக துணிகளை சலவை இயந்திரத்தில் போடுவது, துணிகளை பீரோவில் வைக்க உதவுவது, யோகா செய்வது போன்ற பல்வேறு வேலைகளை செய்து அசத்தி வருகிறது. நாயின் செயல்கள் அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
![australian shepard secret doing yoga and help her owner mary](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/cc0d796047ffe7287d486bb2a2cbb329_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வெளிநாட்டில் வசித்து வரும் இளம்பெண் மேரி. இவர் ஆஸ்திரேலியன் செப்பர்டு ரகத்தைச் சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு சீக்ரெட் என்று பெயரிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருக்கும் மேரி தனது செல்ல நாயான சீக்ரெட்டுடன் இணைந்து எடுத்த பல வீடியோக்களை சமூக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மேரி வெளியிட்ட வீடியோ ஒன்றில், மேரி துணிகளை துணி துவைக்கும் இயந்திரத்தின் கதவை திறந்து உள்ளே சலவைக்காக போடுகிறார். பின்னர் கதவை மூடுகிறார். அவர் செய்வதைப் போன்றே மேரியின் செல்ல நாயான சீக்ரெட்டும் அதேபோன்று துணி துவைக்கும் இயந்திரத்தை சலவை இயந்திரத்திற்குள் துணியை வாயால் கவ்வி போட்டு, சலவை இயந்திரத்தை மூடுகிறது.
செல்ல நாயான சீக்ரெட் தனது எஜமானியான மேரிக்கு ஒரு மனிதன் உதவுவது போல பல்வேறு வேலைகளை செய்து கொடுக்கிறது. மேரி ஹாங்கரில் மாட்டித் தரும் துணிகளை, வாயில் கவ்விக்கொண்டு சென்று பீரோவில் கவனமாக வைக்கிறது. இதுபோன்ற மேரிக்கு பல்வேறு உதவிகளை செல்ல நாயான சீக்ரெட் செய்து வருகிறது.
சீக்ரெட்டின் இந்த செயல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அவரது இந்த வீடியோவிற்கு 51 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளது. மேலும், மேரியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 951 ஆயிரம் நபர்களுக்கு மேல் பின்தொடர்கிறார்கள். இதுமட்டுமின்றி, சில தினங்களுக்கு முன்பு மேரி யோகாசனம் செய்தபோது செல்ல நாயான சீக்ரெட்டும் உடன் சேர்ந்து யோகா செய்தது. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. சீக்ரெட்டிற்கு சமூக வலைதளங்களில் பல ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)