America: அமெரிக்காவை நிலைகுலைய வைத்த பனிப்புயல்; வீட்டிற்குள் முடங்கிய மக்கள் - 26 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் நிலவு கடும் பனிப்புயலால் உயிரிழப்பு எண்ணிக்கை 23ஆக உயர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
America : அமெரிக்காவில் நிலவு கடும் பனிப்புயலால் உயிரிழப்பு எண்ணிக்கை 26ஆக உயர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் பனிப்புயல்
அமெரிக்காவில் தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலை நிலவி வருகிறது. அங்கு பெரும்பாலான பகுதிகளில் பனிப்புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கடந்த வாரத்தில் இருந்தே அமெரிக்காவில் பல பகுதிகளில் கடும் பனிப்புயல் நிலவுவதால் அப்பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த பனிப்புயலால் பல வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சேதம் அடைந்துள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பல பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
F5 tornado strikes Rolling Fork, Mississippi, seven dead reported, but toll likely to rise pic.twitter.com/N6GUl2NcVz
— Malinda 🇺🇸🇺🇦🇵🇱🇨🇦🇮🇹🇦🇺🇬🇧🇬🇪🇩🇪🇸🇪 (@TreasChest) March 25, 2023
மேலும், கடும் பனியால் சாலைகள்ல நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் மறையும் அளவுக்கு பனி படர்ந்திருந்தது. இதனால் நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு இல்லாமல் விபத்துகளும் ஏற்படுகின்றன.
26 பேர் உயிரிழப்பு
இதனைத்தொடர்ந்து அமெரிக்கவின் பல பகுதிகளில் 700க்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்தன. அமெரிக்காவை தற்போது வாடிவதைக்கும் பனிப்புயலால் 5 பேர் உயிரிழப்பு நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
சுமார் 300 பேர் வசிக்கும் நகரமான சில்வர் சிட்டியில் நிலவும் கடும் பனிப்புயலால் இதுவரை 26 பேர் உயிரிழந்தாகவும், பலர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிலர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் கூட அவதி அடைந்து வருகின்றனர். அம்புலன்ஸ்கள் வந்து செல்வதற்கே பல மணி நேரம் ஆகுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இது பற்றி போலீசார் கூறுகையில், ”இந்த பனிப்புயலால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்ததாகவும், பலர் காணாமல் போகியுள்ளனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், உயிருக்கே அச்சுறுத்தல் நிலவும் இந்த பனிப்புயல் காரணமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும்” என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க