Nepal Flight Crash: நேபாளத்தில் நேர்ந்த விமான விபத்து: 72 பேர் பலி: 5 இந்தியர்களின் நிலை என்ன?
நேபாளத்தில் நேர்ந்த விமான விபத்தில் பலியானவர்களில் 5 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா காத்மாண்டுவில் இருந்து நேபாளம் கஸ்கி மாவட்டத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற எட்டி ஏர்லைன்ஸின் விமானம் விபத்துக்கு உள்ளானது. பழைய விமான நிலையத்திற்கும் பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விபத்தில் சிக்கிய விமானத்தில் 68 பயணிகளும், நான்கு விமான குழுவினரும் பயணம் செய்தனர்.
விபத்த்ல் சிக்கிய விமானம் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அங்கு கரும்புகை சூழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து, விமானத்தில் பயணித்தவர்களை மீட்கும் பணிகள் துரிதப்பட்டன. இதுவரை 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
5 இந்தியர்கள் பலி:
இந்த விமானத்தில், 5 இந்தியர்கள், ரஷியாவை சேர்ந்த 4 பேர், தென் கொரியாவை சேர்ந்த 2 பேர் மற்றும் ஐயர்லாந்தை சேர்ந்த ஒருவரும் பயணித்துள்ளனர். விபத்தில், விமானத்தில் பயணித்த 68 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் 4 பேர் என மொத்தம் 72 பேரும் உயிரிழந்துள்ளதாக பலியானதாகவும், யாரும் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.
An ATR-72 plane of Yeti Airlines crashed today near the Pokhara Airport while flying from Kathmandu. According to the info provided by Civil Aviation Authority of Nepal, 5 Indians were travelling on this flight. Rescue operations are underway. pic.twitter.com/rkLC3QbStn
— IndiaInNepal (@IndiaInNepal) January 15, 2023
விபத்து நடந்தது எப்படி?
தரையிறங்கும் போது விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதாக கூறப்படுகிறது. அதன்படி, விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றபோது தீ பிடித்து எரிந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் தற்போதைக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
விமான நிறுவனம் கூறுவது என்ன?
எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்தாவுலா பேசுகையில், "2 கைக்குழந்தைகள் உட்பட 10 வெளிநாட்டினர் விமானத்தில் இருந்தனர்.மேலும் 53 நேபாளிகள், 5 இந்தியர்கள் 4 ரஷ்யர்கள், கொரியாவை சேர்ந்த 2 பேர், அயர்லாந்து, அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 67 பேர் விமானத்தில் பயணித்ததாக கூறி உள்ளார். இடிபாடுகளில் எரியும் தீ காரணமாக மீட்பு பணிகள் கடினமாக உள்ளது என்று நேபாள பத்திரிகையாளர் திலீப் தாபா தெரிவித்து உள்ளார். விபத்தை தொடர்ந்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.