ரசாயன கன்டெய்னரால் பயங்கர தீ விபத்து..! 49 பேர் உயிரிழப்பு..! 450 பேர் படுகாயம்..! சோகத்தில் மூழ்கிய வங்காளதேசம்..!
வங்காளதேசத்தில் தனியார் சரக்கு பெட்டகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 450க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வங்காளதேசத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள சிட்டகாங். இந்த பகுதிக்குட்பட்ட சிட்டகுண்டா உபசில்லா பகுதியில் உள்ள கடம்ரசூல் பகுதியில் தனியார் சரக்குப்பெட்டகம் அமைந்துள்ளது. இந்த பெட்டகத்தில் நூற்றுக்கணக்கான கன்டெய்னர்கள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றில் ஆடைகள் இருந்தது. சில கன்டெய்னர்களில் ரசாயன பொருட்கள் இருந்தன.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11.45 மணிக்கு திடீரென ரசாயன பொருட்கள் இருந்த கன்டெய்னர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. மேலும், இதனால், கன்டெய்னர் மளமளவென தீப்பற்றி எரிந்தது. ஒரு கன்டெய்னரில் இருந்து மற்றொரு கன்டெய்னருக்கு தீ மளமளவென பற்றி எரிந்தது. ரசாயன கலவை என்பதால் தீ பற்றியதும் அந்த ரசாயன கலவை புகையாக காற்றில் பரவியது. இந்த திடீர் வெடிவிபத்தால் சுமார் 4 கிலோமீட்டருக்கு கட்டிடங்கள் குலுங்கியது. பல வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கீழே விழுந்தது.
Chemical blast of Chittagong 😢
— Itz ASIF (@ItZ_ASIF27) June 5, 2022
35 killed and 450+ injured
Number still counting.... #Chittagongblast #chittagongfire #Chittagong #Sitakunda pic.twitter.com/wPFljT8F3s
காற்றில் பரவிய ரசாயன கலவையால் சுமார் 49 பேர் வரை தற்போதைய நிலவரப்படி உயிரிழந்துள்ளனர். காயமடைந்தோர், மூச்சுத்திணறல் உள்ளிட்டவற்றால் சுமார் 450க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 19 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு இன்று காலைதான் தீயை அணைத்தனர். காயமடைந்தவர்களால் அந்த சுற்றுவட்டார மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. மேலும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அந்த நாட்டு பிரதமர் ஹேக் ஹசீனா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். தற்போது இந்த வெடிவிபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விபத்து நடந்த தனியார் சரக்கு பெட்டகம் 21 ஏக்கரில் கிழக்கு வங்காள விரிகுடா கடல் ஓரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தனால், வங்காளதேச மக்கள் மிகுந்த சோகம் அடைந்துள்ளனர். மருத்துவமனையில் காயம் அடைந்தோர் புகைப்படங்கள் பார்ப்பவர்களின் மனதை ரணமாக்குகிறது.
மேலும் படிக்க : Pakistan : அடுத்த இலங்கையாக மாறும் பாகிஸ்தான்? விலை உயர்வால் போராட்டத்தில் இறங்கிய மக்கள்..
மேலும் படிக்க : Video : மருத்துவமனையில்லை.. பசிபிக் கடலில் குழந்தையை பிரசவித்த பெண்.. வைரலாகும் வீடியோ
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்