வருசத்துக்கு 2 நாள் மட்டும் வேலை... ரூ.28 லட்சம் சம்பளம்... பல்பு மாற்றினால் போதும்!
வருடத்திற்கு இரண்டு நாள் பல்பு மட்டும் மாற்றி அதன்மூலம் ரூ.28 லட்சம் சம்பாதித்து வருகிறார் அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர்.
வெறும் விளக்கு மாற்றுவதற்காக இவ்வளவு சம்பளமா என எல்லோரும் ஆச்சர்ய படுவது நியாயம் தான். கெவின் எனப் பெயர்கொண்ட அவர் விளக்கு மாற்றுவது ஒன்றும் வீட்டிலோ அல்லது கம்பெனியிலோ இல்லை. 1500 அடி உயரத்தில் அமெரிக்காவில் சவுத் டக்கோடா என்ற பகுதியில் 1500 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் ஒன்று உள்ளது. இந்த டவரின் உச்சியில் தான் மின்விளக்கு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. ஆறு மாதத்துக்கு ஒருமுறை இந்த மின்விளக்கை மாற்றியமைக்க வேண்டும். அப்படியென்றால் வருடத்துக்கு இரண்டுமுறை மட்டும் இந்த வேலையை செய்ய வேண்டும். ஆனால் உயரம் கருதி இந்த வேலைக்கு யாரும் முன்வரவில்லை. ஏனென்றால், 1500 அடி உயரம் உள்ள அந்த டவரில் ஏறி பணிபுரிய அனைவரும் பயந்தனர். வழக்கமாவே உயரம் என்றால் பலருக்கு அது பயத்தை கொடுக்கும். இதனால் யாரும் முன்வராத நிலையில், கெவின் என்பவர் அந்தப் பணியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
1500 மீட்டர் உயரம் உள்ள அந்த டெலிபோன் டவரின் உச்சியிலிருந்து பார்த்தால் இருபது கிலோ மீட்டர் சுற்றளவு தூரத்திற்கு இருப்பவை எல்லாம் நன்றாக கண்ணுக்கு தெரியும். இந்த டவரில் ஏறி வருடத்துக்கு இரண்டு முறை மின்விளக்கை மாற்றி வருகிறார் கெவின். இந்த வேலைக்காக அவர் வாங்கும் ஊதியம் தான் ஹைலைட். வருடத்தில் இரண்டு நாள் செய்யும் வேலைக்காக அவர் 20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஊதியமாக பெறுகிறார். இந்த தொகையின் இந்திய மதிப்பு, இருபத்தெட்டு லட்சம் ரூபாய்.
இந்தப் பணி தொடர்பாக கெவின் பேசுகையில், "இந்தப் பணி சவால் நிறைந்த ஒன்று. இவ்வளவு பெரிய உயரத்திற்குச் செல்லும்போது பதட்டம் நிறைய இருக்கும். நான் 1500 அடி உயரத்தில் பணிபுரியும் போது மூன்று வகையான காலநிலை மாற்றத்தையும் பார்த்துள்ளேன்," எனக் கூறும் அவர், கடந்த எட்டு ஆண்டுகளாக அனைத்து விதமான டவர்களிலும் ஏறி வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் தான் கெவின் 457 மீட்டர் உயரம் உள்ள அந்த டவரில் ஏறி வேலை பார்ப்பதை சில ஆண்டுகள் முன் ஒருவர் ட்ரோன் மூலம் வீடியோ எடுக்க, இணையத்தில் யதார்த்தமாக அதனை வெளியிட அது வைரலாகியது. இந்த வீடியோ வெளியிட்ட 48 மணி நேரத்திலேயே 60 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை இப்போது ட்ரென்ட் செய்து வரும் நெட்டிசன்கள் இந்த வேலை கிடைத்தால் நீங்க செல்வீர்களா எனக் கமெண்ட் செக்ஷனில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.