மடகாஸ்கரில் படகு மூழ்கிய விபத்தில் 22 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு..
கிழக்கு ஆப்பிரிக்காவின் மடகாஸ்கரில் 47 பேருடன் சென்ற படகு ஒன்று கடலோரப் பகுதியில் கவிழ்ந்ததில் 22 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவின் மடகாஸ்கரில் 47 பேருடன் சென்ற படகு ஒன்று கடலோரப் பகுதியில் கவிழ்ந்ததில் 22 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர். மடகாஸ்கரின் துறைமுகம் தரப்பில் கூறுகையில், பிரெஞ்ச் தீவான மயோட்டிற்குச் இந்த படகு செல்ல புறப்பட்ட போது படகு விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமையன்று நடந்தது.
#Seabird ha avvistato l'imbarcazione in contatto con @alarm_phone.
— Sea-Watch Italy (@SeaWatchItaly) March 11, 2023
È pericolosamente sovraffollata e tra onde spaventose.
Vicino ad essa un mercantile che ha ricevuto ordine dal Centro di coordinamento dei soccorsi di Roma di coordinarsi con la cd guardia costiera libica. https://t.co/pjQiaIFk7Y pic.twitter.com/qDFyKOAZcQ
கடல் மற்றும் ரிவர் போர்ட் ஏஜென்சியின் அறிக்கையின்படி, ஆப்பிரிக்க நாட்டின் வடக்கே அங்கசொம்பொரோனா கடற்பகுதியில் இந்த படகு கவிழ்ந்தது. படகு விபத்துக்குள்ளானதாகவும், அதைத் தொடர்ந்து அதில் இருந்த 23 பேர் விபத்திலிருந்து உயிர் தப்பியதாகவும், 22 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மாயோட்டிற்குப் சட்டவிரோதமாக பயணிக்க திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகக் கப்பல்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை ஏஜென்சியான ஃபிரான்டெக்ஸின் விமானங்கள் மூலம் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன, அதே நேரத்தில் மேலும் இரண்டு வணிகக் கப்பல்கள் அந்தப் பகுதிக்கு சென்று கொண்டிருந்ததை சுட்டிக்காடி கடலோர காவல்படை அறிக்கை வெளியிட்டது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, இத்தாலியை நோக்கி பயணித்த படகு பெங்காசிக்கு வடமேற்கே 110 மைல் தொலைவில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று கடலோர காவல்படை இத்தாலியின் தெற்கு முனையிலிருந்து மூன்று தனித்தனி மீட்பு பணிகள் மூலம் 1,300 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாகவும் கூறினார், மேலும் 200 பேர் சிசிலிக்கு வெளியில் மீட்கப்பட்டனர்.
இத்தாலியில் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இந்த ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி வரை சுமார் 17,600 பேர் இத்தாலியில் இடம்பெயர்ந்துள்ளனர், 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 6,000 பேர் இடம்பெயர்ந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் மத்திய கடல் பகுதியை கடந்து ஐரோப்பாவை அடைய முயன்று இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.