மேலும் அறிய
Advertisement
திரும்ப பெறப்பட்ட வேளாண் சட்டங்கள் - திருவாரூரில் பேரணி நடத்தி வெற்றியை கொண்டாடிய விவசாயிகள்
’’விவசாயிகள் விளைவிக்கின்ற பொருட்களுக்கு எம்.எஸ்.சாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும் வரை யுத்தம் தொடரும்’’
வேளாண் சட்டங்களை கைவிட வலியுறுத்தி கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மத்திய அரசு வேளாண் சட்டங்களை சட்டபூர்வமாக வாபஸ் பெற்றது. வேளாண் சட்டம் வாபஸ் பெறப்படும் என பிரதமர் தெரிவித்த பின்னரும் சட்டப்படி வாபஸ் பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்து சட்ட நடவடிக்கைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் இந்த போராட்டத்தின்போது 714 பேர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் திருவாரூரில் ஜக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பேரணி பொதுக்கூட்டம் நடந்தது. முன்னதாக திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பேரணியை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட தலைவர் சேரன் தொடங்கி வைத்தார். பேரணியில் விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் விஜயபுரம் சாலை நேதாஜி சாலை உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக சென்று தெற்கு வீதி பொதுக்கூட்ட மேடையை அடைந்து நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் தலைமை தாங்கினார். முன்னதாக செயலாளர் மாசிலாமணி வரவேற்றார். அகில இந்திய பொதுச் செயலாளர் அதுல்குமார் அஞ்சன் கலந்து கொண்டு பேசினார். இதில் ஜக்கிய விவசாயிகள் முன்னணி ஐவர் பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினரும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவருமான அசோக் தாவ்லே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது... டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலான தொடர் போராட்டத்தினால் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது. போர் முடிந்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளோம். ஆனால் யுத்தம் முடியவில்லை. விவசாயிகள் விளைவிக்கின்ற பொருட்களுக்கு எம்.எஸ்.சாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும் வரை யுத்தம் தொடரும். விவசாய தொழிலாளர்களின் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகரிக்கபட்டு, சம்பளத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும்.
இந்தியாவின் மத ஒற்றுமை பாதுகாக்க பட வேண்டும் போன்ற கடமைகளை நிறைவேற்றிட ஒன்றினைந்து போராடும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார். இதில் திருவாரூரில் போலீசார் தடையினை மீறி டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட ஒரு மாதம் சிறை சென்ற அமைப்பின் பொருளாளரும் தம்புசாமி உள்ளிட்டவர்களை பாராட்டி நினைவு பரிசினை வழங்கப்பட்டது. இதில் ஜக்கிய விவசாயிகள் முன்னணி கவுர தலைவர் தியாகபாரி, நிர்வாகிகள் உலகநாதன், கலியபெருமாள், சண்முகசுந்தரம், வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion