மேலும் அறிய

50% மானியத்தில் கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டம்... விண்ணப்பிப்பது எப்படி ?

ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக் குஞ்சுகள் 50% மானியத்தில் வழங்கும் திட்டம்.

50% மானியத்தில் கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டம் 

2024-25ஆம் ஆண்டிற்கான "ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக் குஞ்சுகள் (ஒரு பயனாளிக்கு 40 கோழிக்குஞ்சுகள் வீதம்) 50% மானியத்தில் வழங்கும் திட்டம்" விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 1300 பயனாளிகள் தேர்ந்தெடுத்திட கோழிகள் வளர்ப்பில் விருப்பமுள்ள பெண்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

பயனாளிகளின் தகுதி அளவுகோல்கள்:

  • தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளி ஏழைப்பெண்ணாக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழிவளர்ப்பில் ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
  • பயனாளி சொந்த செலவில் ரூ.3200/- செலவில் கொள்முதல் செய்திட திறன் பெற்றவராக இருக்க வேண்டும். சுயசான்று வழங்கிய ரசீது சமர்ப்பிக்கப்பட்டவுடன் 50% மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
  • தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • பயனாளி முந்தைய ஆண்டுகளில் இலவச கறவைமாடு, ஆடு / செம்மறியாடு திட்டம் அல்லது கோழிப்பண்ணை திட்டங்களால் பயனடைந்திருக்கக்கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30% பேர் SC / ST பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணம்

மேலும், விண்ணப்பிக்கும் பயனாளிகள் விண்ணப்பத்துடன் ஆதார்அட்டைநகல், குடும்ப அட்டை நகல், சாதிச்சான்று நகல், கணவனால் கைவிடப்பட்டவர் (அ) விதவை (அ) வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர் என்பதற்கான சான்று, புகைப்படம் 2 வங்கிக்கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகியவைகளை இணைத்து தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய மேற்படி ஆவணங்களுடன் அதே கால்நடை மருந்தகத்தில் வரும் 0209.2024ம் தேதிக்குள் அதே கால்நடை மருந்தகத்தில் ஒப்படைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், மக்களுடன் முதல்வர் முகாமில் உரிய மேற்படி ஆவணங்களுடன் மனுவில் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்களது விண்ணப்பம் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர்  டாக்டர் சிபழனி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget