விழுப்புரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட கட்டிட காண்டிராக்டர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் திண்டிவனம்!
காய்ச்சல் ஏற்படவே பத்து நாட்களுக்கு முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவருக்கு கொரனோ தொற்று உறுதியாகியுள்ளது.

விழுப்புரம்: திண்டிவனத்தை சார்ந்த பில்டிங்க் காண்டிராக்டராக பத்து நாட்களுக்கு முன் கொரனோவால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று இனைய மற்றும் இருதய நோயால் சிகிச்சை பலனின்றி விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள பெரப்பேரி கிராமத்தை சார்ந்த தியாகராஜன் (35) என்பவர் ஐதாராபாத்தில் பில்டிங்க காண்டிராக்டராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு காய்ச்சல் ஏற்படவே பத்து நாட்களுக்கு முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவருக்கு கொரனோ தொற்று உறுதியாகியுள்ளது. அதனை தொடர்ந்து ஐதாராபாத்தில் இருந்து சொந்த ஊரான திண்டிவனம் பெரப்பேரிக்கு நேற்றைய தினம் வருகை புரிந்துள்ளார்.
சொந்த ஊருக்கு திரும்பியவருக்கு காய்ச்சல் அதிகமானதால் முண்டியம்பாக்கத்திலுள்ள விழுப்புரம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தியாகராஜனுக்கு இனைய நோய் மற்றும் இருதய பிரச்சனை இருந்ததால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்ச்சை பலனின்றி உயிரிழந்ததாக மாவட்ட சுகாதார துறை இயக்குனர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணிஅறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கர்ப்பிணிகள் முகக்கவசம் அணியவும், காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.
சீனாவில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்கப் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால், பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். பின்னர் இதற்குத் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டது. அதன் பின்னரே மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இந்நிலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. LF.7 மற்றும் NB.1.8.1 என்ற புதிய வகை கொரோனா வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வகை தொற்றால் பெரிய பாதிப்புகள் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. தேசிய அளவில் 5,364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில், 4,724 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, கேரளாவில் 1,679 பேர், குஜராத்தில் 615 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் 221 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.





















