மேலும் அறிய
Advertisement
அதிவேகமாக சென்று இருசக்கர வாகனத்தில் மோதிய தனியார் பேருந்து...ஒருவர் உயிரிழப்பு... இருவர் படுகாயம்
தனியார் பேருந்து அதிவேகமாக சென்று காணையில் இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம்: விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து அதிவேகமாக சென்று இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் கானை கிராமத்தை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி இன்று தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த பேருந்து ஆனது கானை அருகே சென்றுக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டினை இழந்து பேருந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கானை குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மற்றொரு இருச்சக்கர வாகனம் மீதும் மோதி விபத்துக்குள்ளானதில் காணை கிராமத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
தனியார் பேருந்துகளால் தொடர் விபத்துக்கள்
உடனடியாக இருவரையும் மீட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களுக்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் அதிவேகமாக செல்லும் தனியார் பேருந்துகளால் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதாகும் உயிர் இழப்புக்கள் அதிகரித்து வருவதாகவும், பலமுறை புகார் அளித்தும காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்தனர். பேருந்து விபத்து காரணமாக போக்குவரத்து அரை மணி நேரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திருவண்ணாமலை
வேலைவாய்ப்பு
விழுப்புரம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion