"எங்களை வாழ வைத்தார் விஜய்" - தவெக மாநாடு திடலில் நடந்த சுவாரஸ்யம்
தவெக மாநாட்டிற்கு இடம் கொடுத்த வயதான விவசாயிக்கு பசு மாடு வழங்கிய புஸ்ஸி ஆனந்த்
விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு இடம் கொடுத்த வயதான விவசாயின் கோரிக்கையை ஏற்று வாழ்க்கையை நடத்தி கொள்ள கன்றுடன் கூடிய பசுமாட்டை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மாநாடு நடைபெறும் இடத்தில் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு வருகின்ற 27 ஆம் தேதி நடைபெறுவதால் மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாடு நடைபெறும் இடமானது 85 ஏக்கர் பரப்பளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளாதால் வி.சாலையை சார்ந்த ராதாகிருஷ்ணன் என்ற விவசாயி ஒன்னரை ஏக்கர் நிலம் கொடுத்துள்ளார். வயதான விவசாயி என்பதால் தனது மனைவி ராஜாமணியுடன் வாழ்க்கையை நடத்தி செல்ல வழிவகை செய்ய வேண்டுமென தமிழக வெற்றிக்கழகத்தினரை கேட்டு கொண்டுள்ளனர்.
விவசாயின் கோரிக்கையை ஏற்ற அக்கட்சியின் நிர்வாகியான திருவள்ளூரை சார்ந்த எம்.டி மணி என்பவர் 36 ஆராயிரம் மதிப்பிலான கன்றுடன் கூடிய பசு மாட்டினை இன்று வாங்கி கொடுத்துள்ளார். அதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் என் ஆனந்த் முன்னிலையில் மாநாடு நடைபெறும் இடத்தில் வயதான தம்பதியினரிடம் ஆனந்த் வழங்கினார். வயதான காலத்தில் வாழ்க்கையை நடத்த வழிவகை செய்த அக்கட்சி நிர்வாகிகளுக்கும் விஜய்க்கும் வயதான தம்பதி நன்றி தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தமிழக வெற்றிக்கழக பாதுகாப்பு குறித்து ஐ ஜி அக்ஷராகார்க்க தலைமையில் விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் ஆலோசனை.
தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு வருகின்ற 27 ஆம் தேதி நடைபெறுவதால் மாநாட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐ ஜி அக்ஷரா கார்க் தலைமையில் விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் டி ஐ ஜி திஷா மித்தல், எஸ்பி தீபக் சிவாஜ், ஏ டி எ ஸ் பி திருமால் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் என் ஆனந்த் மற்றும் பவுன்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்த்...
காவல்துறை அதிகாரிகள் எங்களை அழைத்தார்கள், நேற்று எஸ்பி. டிஜிபி ஆகியோரை சந்தித்து ஆலோசனை செய்தோம். இன்றைக்கு ஐஜி அவர்களுடன் ஆலோசனை ஈடுபட்டோம். இதில் வாகனங்கள் வருகை, குடிநீர், கழிவறை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. காவல்துறையான வழிகாட்டுதலின் படி அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம். எனவே மாநாடு நல்லபடியாக நடப்பதற்கான ஒத்துழைப்பை நாங்கள் தந்து வருகிறோம். காவல்துறையும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். காவல்துறை என்ன வழிகாட்டல் கொடுக்கிற அதன்படி செயல்படுவோம் என தெரிவித்துள்ளோம் என்றார்.