விஜயின் ஏசி அறை அரசியல்: அப்துல் சமத் கடும் விமர்சனம்! பாஜகவின் கைபாவையாக தேர்தல் ஆணையம்?
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் ஏ.சி அறை அரசியலை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் - அப்துல் சமத்

விழுப்புரம்: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் ஏசி அறை அரசியலை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் தேர்தல் ஆணையம் பாஜகவின் கைபாவையாக மாறி உள்ளதாக மனித நேயமக்கள் கட்சி பொதுச்செயலாளரும் எம்எல்ஏவுமான அப்துல் சமத் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் தமிழ்நாடு முஸ்ஸீம் முன்னேற்றக்கட்சியின் 31 வது ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு மனித நேய மக்கள் கட்சி பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமத் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அப்துல் சமத், இந்தியா என்பது ஜனநாயக நாடு ஜனநாயகத்தின் அடித்தளம் என்பது இந்தியாவில் வாழும் மக்களின் வாக்குரிமை பட்டதாரிகள், வரிசெலுத்துபவர்கள் மட்டும் தான் வாக்களிக்க முடியும் என்ற நிலைமை மாறி அனைவரும் வாக்களிக்க முடியும் என்று மாறியது, ஜனநாயகத்தின் அடித்தளத்தினை நிர்மூலமாக்கும் வேலையை தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக செயல்படுவதாகவும் தேர்தல் ஆணையம் பாஜகவின் கைபாவையாக மாறி உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
பீகாரில் ராகுலின் பயணம் மக்கள் எழுச்சி பயணமாக அமைந்துள்ளதாகவும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 39 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியபோது தேர்தலில் இரண்டாவது இடத்திற்கே பாஜக வாக்குகள் வாங்கிவிட்டோம் என மார்தட்டி கொண்டனர். தமிழ்நாட்டில் கூடுதல் வாக்குகள் பாஜக எங்கெல்லாம் வாங்கி இருக்கிறதே அதனை தமிழக அரசு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என கூறினார்.
ஆர்எஸ்எஸ் வழி நடத்தினால் என்ன என்ற கேள்விக்கு எடப்பாடி பதில் சொல்ல வேண்டும் ரகசிய திட்டமிடலோடு செயல்படுகிற அமைப்பு ஆர்எஸ்எஸ், தமிழக அரசு பொறுத்தவரை தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலனை நிறைவேற்றபட்டுள்ளதாகவும் மகளிர் உரிமை தொகை வழங்க முடியாத நிலையில் தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த அரசாக திமுக அரசு உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழகம் முக்கிய மாநிலமாக உள்ளதாகவும் தேனியில் கனிமவளங்களுக்கு எதிராக போராட கூடியவர்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் செயல்பாட்டாளர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். கச்சதீவினை மீட்க வேண்டும் தமிழக மக்களின் உரிமையை மீட்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு செயல்பட வேண்டும், பாஜக அரசு அமைந்த பின்னால் வெளியுறவு கொள்கையில் பல்வேறு குளருபடிகளும் இந்தியாவிற்கு எதிரானக உள்ளதாகவும் அமெரிக்காவோடு நெருங்கிய நண்பராக அறியபட்ட டிரம்ப் மிக மோசமான வரி விதிப்பால் திருப்பூர் சிறு தொழில்கள் பாதிக்கபட்டுள்ளன.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வரி விதிப்பினை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இந்திய துணை குடியரசு தலைவர் ராஜினாமா செய்த பிறகு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகின்றன. இந்திய துணை குடியரசு தலைவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன சர்வாதிகாரி ஆட்சி கொடுங்கோல் பாஜக ஆட்சி தான் நடைபெறுவதாகவும், தவெக மாநாட்டில் விஜயின் உரை என்பது ஒரு மாணவன் மனப்பாடம் செய்து ஒப்பிவித்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் இருந்ததாகவும், தவெகவிற்கு கொள்கை எதிரியாக உள்ள பாஜகவிற்கு எந்த எதிர்ப்பினை விஜய் தெரிவிக்கவில்லை,
ஒரு வாக்கிற்காக திரைப்படத்தில் நடித்த விஜய் பீகாரில் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து எதுவும் பேசவில்லை யாருக்கு ஆதரவாக விஜய் செயல்படுகிறார் என கேள்வி எழுந்துள்ளதாகவும், கேரவனில் ஏசி அறையில் அமர்ந்து மாநாட்டிற்கு வருவது, அப்போது மக்களை சந்திப்பது என்பதும், ஏசி அறை அரசியலை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என அப்துல் சமத் தெரிவித்துள்ளார்.





















