மேலும் அறிய
Advertisement
சிதம்பரத்தில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் - வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது
’’சிதம்பரம் நகர காவல் துறையில் மாணவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து பின்னர் ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்தனர்’’
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் பல்வேறு மக்கள் கூடும் பகுதிகள் திறக்கப்படாமல் இருந்தன இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதை அடுத்து ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் பள்ளியும் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது இந்நிலையில் அங்கு படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் சிலர் வகுப்புகளுக்கு சரியாக செல்லாமல் வெளியே சுற்றுவதாக புகார் வந்தன.
இதை தொடர்ந்து மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் கண்காணித்து வந்தனர். அப்போது அந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 6 மாணவர்கள் ஒருசில வகுப்புகளை புறக்கணித்து வெளியே சுற்றுவது தெரிய வந்து உள்ளது. இதையடுத்து அந்த மாணவர்களை பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் (55) அழைத்து கண்டித்து உள்ளார். இதையடுத்து அந்த மாணவர்களை ஆசிரியர் சுப்பிரமணியன் முட்டிபோட வைத்து பின் பிரம்பால் கொடூரமாக அடித்து பின் காலால் உதைத்து உள்ளார். இதனை வகுப்பில் இருந்த ஒரு சில மாணவர்கள் கைப்பேசி மூலம் வீடியோ எடுத்தனர். பின் அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைபார்த்த பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதற்கு பின் இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் துறையில் மாணவன் கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து பின்னர் ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்தனர். அதற்கு பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிதம்பரம் கிளை சிறையில் அடைத்தனர். மாணவர்களை ஆசிரியர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஆசிரியர் சுப்பிரமணியனை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கு வரும் மாணவர்களை இதுபோல் நடத்தும் சம்பவங்கள் பல நடந்துள்ளன ஆதலால் இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion