மேலும் அறிய

ஜி20 மாநாட்டுக்காக புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு - ஆட்சியர் வல்லவன் தகவல்..

ஜி20 மாநாட்டுக்காக புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது -மாவட்ட ஆட்சியர் வல்லவன்

ஜி20 மாநாட்டுக்காக புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஜி20 மாநாடு வருகிற 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை செயலர் ராஜீவ் வர்மா, புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், ஜி20 தொடர்பு அதிகாரியுமான வல்லவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு செயலர்கள் ராஜூ, ஜவஹர், முத்தம்மா, உதயக்குமார், குமார், நெடுஞ்செழியன், ரிஷிதா குப்தா, ஆரோவில் பவுண்டேஷன் செயலர் டாக்டர் ஜெயந்தி ரவி, டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஜி20 தொடர்பு அதிகாரியான ஆட்சியர் வல்லவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

புதுச்சேரியில் வருகிற 30, 31-ந் தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. கூட்டத்தில் 20 உறுப்பினர் நாடுகளை சேர்ந்த பிரநிதிகளும், 20 உறுப்பினர்கள் அல்லாத நாட்டு பிரநிதிகளும் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டின் முன்னேற்பாடுகள் குறித்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் 30-ந் தேதி புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பான கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை முன்வைக்க உள்ளனர். இந்த வாய்ப்பினை புதுச்சேரி கலாசாரம், சுற்றுலா, கலை வடிவங்கள் அனைத்தையும் வெளிநாடுகளில் இருந்து வரும் பிரநிதிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் அவசர கால மருத்துவ வசதி குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதுவையை அழகு மிளிர காண்பிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி வரலாற்று பிரதான சின்னங்கள், தலைவர்கள் சிலைகள், முக்கிய அரசு அலுவலகங்கள் ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட உள்ளது. இதில் ஜி20 சின்னத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. மேலும் சுய உதவிகளுக்கு கோலப்போட்டிகள் நடத்தப்படுகிறது.

ஜி20 மாநாட்டையொட்டி புதுவை மற்றும் காரைக்காலில் தலா 20 நீர் நிலைகளை தேர்வு செய்யப்பட்டு சுற்றுபுறத்தை பாதுகாக்கும் வகையில் மரங்களை நட்டு பாதுகாத்து ஜி20 பூங்காவாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ.1.25 கோடி ஒதுக்கீடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் மாநாட்டு மையத்தில் அறிவியல் கண்காட்சி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து துறைகளும் தங்களின் அலுவல் தொடர்பான அனைத்து பரிமாற்றங்களிலும் ஜி20 மாநாட்டின் சின்னம் இருக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கும் சம்பள ரசீதில் சின்னம் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டை சிறப்பாகவும், பாதுகாப்பான முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி மத்திய வெளியுறவு துறை ஏற்றுக்கொண்டுள்ளது. ஜி20 மாநாட்டில் மேற்கொள்ளப்படும் கலை நிகழ்ச்சி உள்ளிட்டவைகளுக்காக ரூ.1 கோடியே 25 லட்சம் அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வல்லவன் கூறினார்.

என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Embed widget